பக்கம்:பாற்கடல்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

37


“என்ன தெரியப் போகிறது? பிச்சை, கேஸ் பிடிக்க அலையறான்!”

“சப்-இன்ஸ்பெக்டரில்லையா?”

அவன் வயிற்றுக்குள்ளேதான் பண்ணின கத்தரிக் காயில் பாதிக்குமேல் போகப் போகிறது. ஏண்டா பிச்சு, நாளுக்கு ஒரு சுத்து பெருத்துண்டே போறயே. எங்கு போய் இது நிற்கும்? ஒருநாள் 'டப்'……."

”கத்தரிக்காய் வெளியே கொட்டும்.”

”அப்போ பிச்சுவுக்குக் கேஸு ருசு கிடைச்சாச்சு.”

”அவன் வயிற்றிலேயே.”

”அப்போ கேஸ் ஐயா மேலா, பிச்சு மேலா?”

"இல்லை, கத்தரிக்காய் கொல்லைக்காரன் மேலே, கத்தரிக்காயைப் பயிர் செய்ததற்காக, போலீசுக்குக் குற்றவாளியைப் பிடிக்க வேண்டாம். யாராவது ஒரு ஏமாளி கிடைச்சாப் போதும். அவ்வளவுதான்!”

“லசுஷ்மணன் மாதிரி.”

"ராமனே கொஞ்சம் மக்குத்தான். எங்கே சுறுசுறுப்பாயிருந்திருக்கான் ?”

”புனர்வசு நக்ஷத்திரம் கொஞ்சம் அப்படி இப்படித்தான்.”

“இருந்தாலும் அதிர்ஷ்டம் இருக்கு. ஆள்கட்டு இருக்கு. பிறத்தியார் தொடையில் கயிறு திரிக்க ஆளும் அப்பப்போ கிடைக்கிறான்.”

”உழைக்கிறவன் ஒருத்தன். பேரைத் தட்டிண்டு போறவன் இன்னொருத்தன். அகஸ்தியன், உத்திர காண்டத்தில் ராமனுக்கு நாஸுக்காக ஞாபகப்படுத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/43&oldid=1533016" இலிருந்து மீள்விக்கப்பட்டது