பக்கம்:பாற்கடல்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

லா. ச. ராமாமிருதம்


ஐயனார் சிவனுக்குப் பிறந்ததால் பெருந்திருவுக்கும் மகன்.

கறுப்பண்ணன் பெருந்திருவின் பணியாள்.

பெருந்திருவைச் சார்ந்தவர்கள் என்கிற முறையில் அம்முவாம் இந்தத் தெய்வங்களையும் தன் வழிபாட்டில் சேர்த்துக்கொண்டது; அதற்கே உரித்தான வழிபாடு மோஸ்தரில்;

பாட்டனார், ஐயனாரைத் தோத்தரிக்கிறார்:


நஞ்சிருக்கும் நெஞ்சிருக்கும்
     நாரியோடு பாகருக்கும்
மஞ்சிருக்கும் வண்ணநெடு மாயருக்கும்
     மஞ்சன் என உற்ற ஐயனார்
அப்பன் உண்டு துணை எனக்கு
     மற்றெவர்க்கும்
அஞ்சேன் மனம்.

ஒரு சமயம்.

வாளாடியில் தங்கை வீட்டுக்குப் போய்விட்டு, தாத்தா லால்குடிக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார். இரவு வெகு நேரமாகிவிட்டது. இப்போ இரண்டு நிமிஷங்களுக்கு ஒரு முறை திருச்சி ரோடில் பஸ்கள் பறக்கின்றன. அந்த நாளில் பஸ்ஸா, மாட்டு வண்டியா, தெருவிளக்கா, ரோடா?

அமாவாசை வேறு.

எனக்கு இப்பவும் ஒரு ஏக்கம். இந்த நாளில் மையிருட்டு என்பதையே பார்க்க முடிவதில்லையே. முகத்துக்கெதிரே கையைப் பிடித்தால் கை தெரியா-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/66&oldid=1532511" இலிருந்து மீள்விக்கப்பட்டது