பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூமகேது

சீதாதேவி

மதுரைக் கீழாவணி மூல வீதியில் ஒரு பெரிய வீடு. காஸ் விளக்குகளும் கொத்து விளக்குகளும் பந்தலில் நிலவை வாரி இறைக் கின்றன. கல்யாணப் பரபரப்பு நிறைந்து எங்கும் ஒரே கூட்டமாக இருக்கிறது. சிட்டுக்குருவிகள் போல் சிறுவர் சிறுமிகள் ஒடி விளை யாடுகிருர்கள். பொன்னுசாமிப் பிள்ளை நாயனம் கர்ணுமிருதமாக ஒலிக்கிறது. ஊர்வலத்துக்குப் புறப்பட்ட பெண்டுகள் கூட்டங் கூட்டமாக வந்து கூடினர். சந்தனம், புஷ்பம், சர்க்கரை முதலிய மங்கலப்பொருள்களைக் கூடத்தில் கொண்டுவந்து வைப்பதில் சிலர்

அன்று நான்காம் நாள் கல்யாணம். வக்கீல் குப்புசாமி ஐயர் என்ற குப்பண் ண அவர்களின் ஒரே பெண் சரஸ்வதியைச் சிங்கா நல்லூர்ச் சுந்தரமையரின் ஏக புத்திரன் சுப்பு என்கிற சுப்பிர்மணிய னுக்குப் பாணிக்கிரகணம் செய்து கொடுத்தார். பெண்ணுக்கு வயசு பதின்மூன்று, மாப்பிள்ளைக்கு வயசு பதினேழு.

சம்பந்தியம்மாள் மீளுட்சி சாட்சாத் லட்சுமிபோல் இருந்தாள். அவள் அணிந்திருந்த கடிகாரச் சங்கிலி, பெண்கள் எல்லாரையும் கவர்ந்தது. இருபது பவுன்! எடுத்த கை இற்றுப் போகும்போல் இருந்தது. இந்தக் காலத்துக்கு இது பழைய மோஸ்தர்தான், ஆளுல் நாற்பது வருஷத்துக்கு முன் இந்தச் சம்பவம் நடந்த காலத் தில் - அது புத்தப் புது மோஸ்தர். -

மற்ற எல்லாரும் வங்கி, காசுமாலை, கொடி என்று ஒரே பாணி யில் நகை போட்டுக்கொண்டிருக்க, இவள் மட்டும் நேற்று வந்த புதிய தினுசுச் சங்கிலி அணிந்திருந்தது அங்கிருந்த பெண்டுகளுக் கெல்லாம் அவளிடத்தில் மதிப்பையும், அவளிடம் பேசத் தயக்கத் தையும் உண்டாக்கியது. - -

ஊர்வலத்துக்கு ஸ்ாரட்டு வர நேரமாயிற்று. அவரவர்கள் மனம் போனபடி கூடிக் கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். - ஒரு மாதுளம் விதை அளவுள்ள எட்டுச் சிவப்புக் கல்லோடு, காவடி உட்பட இரண்டு பவுன் தங்கம் கொண்ட தோடு ஒன்று. காலணு அளவுள்ள காதுத் துளையிலிருந்து ஊசலாட, ஒரு பாட்டி மீளுட்சியினிடம் வந்து பேச்சுக் கொடுத்தாள். பிறகு, "என்ன,

- சம்பந்தியம்மா? நீங்கள் என்னவோ புதுச் சங்கிலி பண்ணிக்கொண்

டிருக்கிறீர்களாம். எங்கள் வீட்டுப் பெண்களும் பேத்திகளும் தேற்றி