பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூமகேது - $9

லிருந்து என்னைத் துணைக்கிருர்கள். அது மாதிரி அவர்களுக்குப் பண்ணிப் போடவேண்டுமாம். எங்கே சற்று அதைப் பார்க்கிறேன். இப்படிக் கையில் கொடுங்கள்’’ என்று சொல்லி வாங்கிப் பார்த்தாள்.

'சங்கிலி அழகாகத்தான் இருக்கிறது. ஆணுல் இந்தப் பவுனேச் சுமக்கவே இந்தக் காலத்துக் குட்டிகளுக்குத் திராணி இல்லையே! போதும், போதும்! என் நாட்டுப் பெண் போட்டுக்கொண்டிருக் கிருள், பாருங்கள்! அந்தக் கொடி பதினைந்து பவுன்” என்ருள்.

மீனுட்சி, 'ஏன் பாட்டி, ஒரு கொடிக்குப் பதினேந்து பவுன் போட்டால் கழுத்து நிறைந்திருக்கிறதா? இதுவாளுல் கழுத்து திறைந்திருக்கிறது, பாருங்கள். போன வருஷம் பட்டணத்துக்குப் போயிருந்தபோது வாங்கிக்கொண்டு வந்தேன்’ என்றுள், !

"ஆமாம்; பட்டணத்திலேதான் தினத்துக்கு ஒரு நாகரிகம் மாறிக்கொண்டிருக்கிறதே! நீங்கள் சொன்னுற்போல, கொடி இது மாதிரி கழுத்து நிறைந்து இருக்காதுதான். ஜாக்கிரதையாகக் கழுத்திலே சங்கிலியைப் போட்டுக்கொள்ளுங்கள். ஜாக்கிரதை அம்மா, ஜாக்கிரதை கொடி என்றதும் ஞாபகம் வருகிறது. என் நாட்டுப் பெண்ணுக்குப் பக்கத்தகத்துப் பெண் ஒரு நாழியிலே கழுத்துக் கொடியைத் தொலைத்துவிட்டு வந்து நின்ருள். அதுவும் இவளுடையது மாதிரி நாயுருவிக் கொடிதான்' என்ருள் பாட்டி.

இதைக் கேட்டதும் மீளுட்சிக்குத் திக்கென்றது. "பாட்டி, பதி னேந்து பவுன் நகை கழன்று விழுந்ததுகூடத் தெரியாமல் இருக்குமா ஒருத்திக்கு? அவள் என்னத்தனே சமர்த்துப் போல் இருக்கிறது!’ என்ருள் மீளுட்சி. , , -

"கொடி மட்டுமா? கொடியில் இரண்டு திருமங்கிலியம். கல்லுக் கல்லாக இரண்டு மேர்கராக்கள். ஆடி வெள்ளிக்கிழமையும் அதுவு 敏nfr&翼”° - - -

இதற்கு மேல் மீனுட்சியால் கேட்க முடியவில்லை. தலே சுற்றி யது. நெஞ்சில் சம்மட்டி கொண்டு அடிப்பதுபோல் இருந்தது. கழுத்துச் சங்கிலி, பாம்பாகப் படம் எடுத்து ஆடுவதுபோல்

இருந்தது.

'பாட்டி, நல்ல நாளும் அதுவுமாக, கல்யாணப் பந்தலில் ஒன் னும் சொல்லாதீர்கள். கேட்கக் கேட்க எனக்கு மனசுக்குக் கஷ்ட மாக இருக்கிறது. நாங்கள் இரண்டு பேரும், ஆளுக்கு ஒரு கருக் காயை வைத்துக்கொண்டு கல்யாணம் செய்கிருேம். எங்கேயாவது நன்றக இருக்க வேண்டும்' என்று சொல்லிவிட்டு, மீளுட்சி அங்கிருந்து நழுவினுள். - - -

அவள் பெயர் என்ன, எந்த ஊர் என்றெல்லாம் பாட்டியினிடம் கேட்க வேண்டும் என்று நாக்குத் துடித்தது, அப்படிக் கேட்பது உசிதமாக இருக்காது. திடீரென்று அதையெல்லாம் இவள் ஏன்