பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பாற் கடல்

ணங்.ணங்...-ணங்...ணங்...சம்முகம் எங்கே? காணுேம். "சம்முகம், சம்முகம்' என்று கூப்பிட்டார் கிழவர். பதிலில்&ல. ...நர்ஸைக் கொண்டுபோய் வீட்டில் சேர்த்துவிட்டுப் படுக்கிற பொழுது மணி இரண்டு அடித்திருக்கும். அசந்து துங்குகிருன் பாவம்.. - -

கொம்பை வைக்கோல் அழியில் முட்டிமோதும் ஓசை கேட்டது. ..இந்த விஷமம் இரண்டுக்கும் கிடையாதே புதிய பாடமோ?...

கிழவர் வெற்றிலேயை மென்றுகொண்டே தொழுவத்துக்கு வந்தார். இருளின் திட்பம் ஒரு சொல்லுக்குக் குறைந்து, மெல்லிய கறுப்புத் திரை போர்த்தியது போலிருந்தது. உத்திரக் கட்டையைத் துழாவி தீப்பெட்டியை எடுத்து அரிக்கன் லாந்தரை ஏற்றினர்.

கன்றுக்குட்டிக் கூண்டை யொட்டி கறவை மாடு நின்றுகொண் டிருந்தது. அறைச் சுவரையொட்டி சினேமாடு நின்றுகொண்டிருந் தது. இரண்டு மாட்டுக்கும் நடுவில் கூரையிலிருந்து லாந்தர் தொங் கிக்கொண்டிருந்தது, தரையில் கிழவர் நின்றுகொண்டிருந்தார். -

லாந்தரின் இலேசான அசைவில், மாடுகளும் கிழவரும் கருநிறம் பூண்டு சுவரில் குறுக்கும் மறுக்கும் ஒடிக்கொண்டிருந்தார்கள், கிழவர் லாந்தரைத் தொட்டு ஆட்டத்தை நிறுத்தினர்.

கறவை மாட்டுக்கு மடுவில் பால் குத்த ஆரம்பித்து விட்டதால், தொடர்ந்து அலறிற்று. கிழவர் குனிந்து பார்த்தார். காம்புகள் "உன்னேப்பார் என்னைப்பார்’ என்றிருந்தன. - கூண்டினுள் முன்னுடம்பு தனியும்படி காலே அகலவிரித்து மூஞ்சியைக் கம்பழிக்குள் துருத்திக்கொண்டிருந்தது கன்று. இந்தப் போஸ்ை கண்டாலே அசாத்திய கோபம்மூளும் கிழவருக்கு. வேறு எதற்கோ செல்லும் பாவனையில் அதன் பக்கம் நெருங்கி, கரிய மூக் கில் நறுக்கென்று சுண்டிவிட்டுவிடுவார். இரண்டு நிமிஷம் கழித் துப் பார்த்தால் மீண்டும் மூஞ்சியைத் துருத்திக்கொண்டுதான் நிற் கும் அது. கறவை மாடு நின்ற நிலையில் அதன் மடுவுக்கும், கன்றின் மூஞ்சிக்கும் நாலு விரல்தான் இடைவெளியிருக்கும். ஆளுல் அதற்கு மேல் ஒரு அங்குலம் பின்வாங்கக் கழுத்துக் கயிறு கற்வை மாட்டுக்கோ, ஒரு அங்குலம் முன்னேற, அழி கன்றுக்கோ இடம் தராது. இந்த நிலையை மிகவும் ரசித்தார் கிழவர். .

கொம்பால் அழியைத் தட்டும் ஒசை மீண்டும் கேட்டது. சினை மாடுதான்! . . -

கிழவர் இந்தப் பக்கம் வந்தார். கர்ப்பிணியை மேலும் கீழும் பார்த்தார். எல்லாம் விபரீதமாகப் பட்டது. அடிக்கொரு தரம் வைக்கோல் அழியைக் கொம்பால் தட்டுகிறது. நிலைமாற்றி நிலை மாற்றி நின்று, நிலைகொள்ளாமல் தவிக்கிறது. பின்னங்கால உதறிற்று.