பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேவலம் ஒரு காய்! புனிதன்

- சுத்தம் செய்யப்பட்ட தன் இரட்டைக் குழல் துப்பாக்கியைக் கட்டில் விளிம்பில் சாத்தி வைத்தரின் துரை. தோட்டாக்களேச் சரி பார்ப்பதில் அவன் கவனம் பதிந்திருந்தது.

'கன்னியப்பா, என்று இடையில் குரல் கொடுத்தான்.

கூடாரத் திரையை விலக்கிக்கொண்டு குறவன் கன்னியப்பன் எட்டிப் பார்த்தான். சனப்பனூர் எஸ்டேட்டைச் சேர்ந்தவர்கள் கன்னியப்பனைத் துரைக்குத் துணையாக ஏற்பாடு செய்திருந்தார்கள். சேலத்துச் சீமாஞன துரைக்கு அவர்கள் மிகவும் வேண்டியவர்கள். தங்கள் எஸ்டேட்டை அடுத்த காடு வேட்டைக்குத் தகுந்த இடம் என்று அவனுக்கு எத்தனையோ முறை எடுத்துச் சொல்லியிருந்தா கள். இப்போதுதான் துரைக்கு இந்நப் பக்கம் வருவதற்கு ஒழிந்தது. கன்னியப்பன் தயக்கத்துக்குக் காரணம் தெரிந்ததும் துரைக்குச் சற்றுப் பெருமையாக இருந்தது. அவன் கட்டிலுக்கு அடியிலே யிருந்த உயர்ந்தி ஜாதி இளஞ்சிவப்பு நாய் அந்தக் குறவனை ஏறிட்டு நோக்கி நிமிர்ந்து நின்றது. - .

அதன் தலையை மெல்லத் தடவி விட்டுக்கொண்டு, 'இந்தக் காட்டுக்குள்ளே என்ன கிடைக்கும்?' என்ருன் துரை. -

"உங்களைப் போலத்தான் போன மாதம் வந்த ஒருவர் சிறுத்தைப் புலி அடித்தார். கழுதைக் குறத்தி நிறைய மேய்கிறது. காட்டும் பன்றிக் கூட்டம் ரொம்ப அதிகம், அப்புறம் குள்ள நரி-அதோ ஊளையிடுவது கேட்கவில்லை? நாங்கள் காடை, கவுதாரி முயல் அடிப்போம். மானும் கடமையும் கூட இருக்கிறது. மணிப்புரு பிலு. பிலுவென்று திரியும்,' என்று அடுக்கினன்.

துரை கைக் கடியாரத்தைப் பார்த்துக் கொண்டான். ரேடியத் தால் மின்னிய எண்கள் பதினென்றரை என்று காட்டின. வெளியே கும்மிருட்டு. தொலைவிலே கோட்டான் ஒன்று சுருதி சேர்த்துக் கொண்டிருந்தது. மழை அடங்கிய வேளையாதலால் சில் வண்டின் ரீங்கார்மும் தவளைகளின் அலறலும் துணை சேர்ந்தன.

இருந்தாற் போலிருந்து திடீரென்று-என்ன பயங்கர வெடி!

வேறு யாராவது வேட்டைக்கு வந்திருக்கிருர்களோ?’ என்று முகத்தைச் சுளித்தான் துரை. - -