பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பாற் கடல்

ரோஸி இப்போது அந்தத் தட்டைவிட்டு விலகிக் குறவனேயே மோப்பம் பிடித்துச் சுற்றிச் சுற்றி வந்தது. அவன் சுருட்டி வைத் திருந்த மடிப்பக்கமாகத் தாவியது. - "என்னடா வைத்திருக்கிமூய்?' என்ருன் துரை தேற்றியைச் சுருக்கிக்கொண்டு.

வேண்டாம் சாமி. இது ஒரு...' *சும்மா சொல்லு."

"ஒன்றுமில்லை. காட்டுப் பன்றியின் கல்லீரல். கறுப்பனுக்கு இது என்ருல் ரொம்ப இஷ்டம்,” என்று கருநீலத்தில் கைப்பிடி அள் விருந்த ஈரலை எடுத்துக் காட்டினன். - :

ரோஸி அதன்மேல் தாவியது. 'சரி சரி, அதைக் கொடு அதற்கு!' "உங்களுக்கில்லாதது எனக்கு எதற்கு சாமி?’ என்று ரோனச் யின் பீங்கான் தட்டில் அதைக் கொண்டுபோய் வைத்தான் குறவன், ரோஸி ஆவலோடு பாய்ந்து சென்று அதைக் கெளவியது. வெறி யுடன் ஒரு கடி- -

அடுத்த கணம் அந்தப் பிராந்தியமே அதிரும்படியான வெடி: அங்கு எழுந்த புகை அடங்கியதும் கண்ணேக் கசக்கிக்கொண்டு பார்த்தான் துரை. அந்தப் பீங்கான் தட்டு சில்லுச் சில்லாகப் போயிருந்தது. - ரோஸி-ஐயோ! அதன் தலையையே காளுேம்! கால்கள் லேசாக அசைந்தன. அதற்கு அருகிலே வந்து நின்ற வன் கன்னியப்பன்தான். - -

"இதை நீங்கள் தூக்கி எறிகிறீர்களா, நான் தூக்கி எறியட்டுமr சாமி?’ அந்தக் குறவன்தான் கேட்டான்.

அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான் துரை. - அந்த வெறிச் சிரிப்பு-அந்த முதத்தில் இதற்கு முன் இவ்வளவு கொடூரமானதை அவன் பார்த்ததேயில்லை.