பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பாற் கடல்

லேயே! மாடிக்குப் போய் அவர் மாமியாருக்குச் சிசுருவுை பண்ணி விட்டு, மலம் முதற்கொண்டு எடுக்கவேண்டி யிருக்கிறது-வேருெரு வரையும் பாட்டி பணிவிடைக்கு விடுவதில்லை-உங்கள் அப்பாவுக் குச் சிசுருவைடி பண்ணிவிட்டு,...... அப்பாவுக்கு என்ன, இந்த வயசில் இவ்வளவு கோபம் வருகிறது! ஒரு புளியோ, மிளகாயோ துளி சமையலில் தூக்கிவிட்டால், தாலத்தையும் சாமான்களே யும் அப்படி அம்மானே ஆடுகிருரே-அவரைக் கண்டாலே மாட்டுப் பெண்களுக்கெல்லாம் நடுக்கம். அழகாயிருக்கிருர், வழித்த கழி மாதிரி, ஒல்லியாய், நிமிர்ந்த முதுகோடு; இந்த வயசில் அவர் தலை யில் அவ்வளவு அடர்த்தியாய்த் தும்பை மயிர்! கண்கள் எப்பவும் தணல் பிழம்பாவே யிருக்கின்றன. அம்மா சொல்கிருர்: ' என்ன செய்வார் பிராம்மணன்? உத்தியோகத்திலிருந்து ரிடையர் ஆன பிறகு பொழுது போகவில்லை. ஆத்தில் 'அமுல் பண்ணுகிறர். ஆபீஸில் பண் ணிப் பண்ணிப் பழக்கம்! இனிமேல் அவரையும் என்னேயும் என்ன செய்கிறது. எங்களே இனிமேல் வ8ளக்கிற வயசா? வளைத்தால் அவர் டப்' என முறிஞ்சு போவார். நான் பொத்தைப் பூசணிக்காய் மாதிரி பொட்டென உடைஞ்சு போவேன். நாங்கள் இருக்கிற வரைக்கும் நீங்கள் எல்லாம் சஹறிச்சுண்டு போக வேண்டி யதுதான். இந்த மாடியிலிருக்கிற கிழவியை வந்த விடத்துக்குச் சேர்க்க வேண்டிய பொறுப்பு ஒண்னு இருக்கு அப்புறம்-’’

& 'ஏன் அம்மா இப்படியெல்லாம் பேசறேள்?' என்பார் மூத்த

ஒர்ப்படி.

"பின்னே என்ன, நாங்கள் இருந்துண்டே யிருந்தால், நீங்கள் உங்கள் இஷ்டப்படி எப்போ இருக்கிறது?’

'இப்போ எங்களுக்கு என்னம்மா குறைச்சில்?’

அம்மாவுக்கு உள்ளுறச் சந்தோஷந்தான். ஆளுல் வெளிக் காண்பித்துக்கொள்ள மாட்டார். "அது சரிதாண்டி, நீ எல்லாருக் கும் முன்னலே வந்து ட்டே. பின்னுலே வந்தவாளுக் கெல்லாம் அப்படி யிருக்குமா? ஏன், என் பெண்ணேயே எடுத்துக்கோயேன்; அவளுக்குக் காலேஜ் குமாரியா விளங்கணும்னு ஆசையாயிருக்கு. இஷ்டப்படி வந்துண்டு போயிண்டு, உடம்பு தெரிய உடுத்திண்டு. நான் ஒருத்திதான் அதுக்கெல்லாம் குந்தகமா யிருக்கேன். அவள் பிறந்த திலிருந்தே அப்பா, உடன் பிறந்தமார் செல்லம். நான் வாயைப் பிளந்தேன்னு முதன் முதலில் பிள்ளே யாருக்குத் தேங்காய் உடைப்பவள் அவள்தான். என் வயிற்றுப் பிண்டமே இப்படி யிருந் தால், வீட்டுக்கு வந்தவாள் நீங்கள் என்ன என் பேச்சைக் கேட்டு டப் போறேள்??

"இல்லேம்மா, நாங்கள். நீங்கள் சொன்னத்தைக் கேட்க ருேம்மா-' என்று ஏகக் குரலில் பள்ளிப் பையன்கள், வாய்பாடு

படிப்பது போல், கோஷ்டியாய்ச் சொல்லுவோம்.