பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாற் கடல் 77

நான் உங்களேவிடச் சின்னவள் தானே! உங்கள் அறிவை என்னிடம் எதிர்பார்க்கலாமா? உங்களுக்காக இல்லாவிட்டாலும் எனக்காகவா வது என்னுடன் நீங்கள் பேசனும் எனக்குப் பேச்சுவேனும், உங்கள் துணே வேணும்.ஐயையோ, இதென்ன உங்களைக் கையைப் பிடித்து இழுக்கிற மாதிரி நடந்துகொள்கிறேனே! என்னே மன்னிச்சக் கிேர்ங்கோ. தப்பா நினேச்சுக்காதேங்கோ. ஆனல் எனக்கு உங்க 2ளயும் என்னேயும் பற்றித் தவிர வேறு நினைப்பில்லே. நானும் நீயும்: எனும் இந்த ஆதாரத்தை ஒட்டின சாக்குத்தான் மற்றதெல்லாம் எனக்கு. இதைப் புற்றிச் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால், எழுத வந்ததுகூட மறந்துவிடுகிறது.

ஆளுல், 'நானும் நீங்களும் என்று எல்லாம் என்னவும் எழு தவும் சுவையாயிருந்தாலும் குடும்பம் என்பதை எங்கே ஒதுக்கி, வைக்க முடிகிறது; அல்லது மறந்துவிட முடிகிறது? குடும்பம் என் பது ஒரு கூrராப்தி, அதிலிருந்துதான் லகiமி, ஐராவதம், உச்ரவஸ் எல்லாம் உண்டாகிறது, குடும்பத்திலிருந்து நீங்கள் முளேத்ததகுல் தானே எனக்குக்கிட்டினிர்கள்? ஆலகாலவிஷமும் அதிலிருந்துதான்; உடனே அதற்கு மாற்ருன அமிருதமும் அதில்தான். ஒன்றுமில்லே, அல்ப விஷயம்; இந்தக் குடும்பத்திலிருப்பதால்தானே, தீபாவளியை, நான் அநுபவிக்க முடிகிறது! நீங்கள் எங்கேயோ இருக்கிறீர்கள்.

எனக்குத் தோன்றுகிறது, நானும் நீயுமிலிருந்து பிறந்து பெருகிய குடும்பத்தில் நானும் நீயுமாய் இழைந்து, மறுபடியும் குடும்பத்துள் ளேயே மறைந்து விட்ட நானும் நீயின் ஒரு தோற்ற சாகூஜி தான் தீபாவளியோ? குடும்பமே நானும் நீயாய்க் கண்ட பின், இரண்டிற். கும் என்ன வித்யாசம்? -

எனக்கு இப்படித்தான் தோன்றிற்று, தீபாவளிக்கு முதல் ராத்ரி, கூடத்து ஊஞ்சலில் புது வேஷ்டிகளும் புடவைகளும் சட்டைகளும் ரவிக்கைகளும் போராய்க் குவிந்திருப்பதைப் பார்த்ததும். ஏன், இத் தன துணிகளேயும் நானே உடுத்திக்கொண்டு விட்டால் என்ன? பொம்மனுட்டி துணிகளே நானும், புருஷாள் துணிகளையும், ட்ங்களுக் காக நானே! நீங்கள்தான் இங்கில்லேயே. எல்லாமே இந்த விசுவரூப நானும் நீயுக்குந்தானே??

அம்மா ஒரு மரச்சீப்பில் கரும்பச்சையாய் ஒரு உருண்டையை ஏந்திக்கொண்டு என்னிடம் வந்தார்.

'ஏ குட்டி, சாப்பிட்டுட்டையா?' "ஆச்சு அம்மா.'

'தின்ன வேண்டிய தெல்லாம் தின்னுச்சா!'

"ஆச்சு-'(அந்தக் கோதுமை அல்வாவில் ஒருதுண்டு வாங்கிக் கொண்டால் தேவலே. நான்தான் துண்டு போட்டேன். ஆளுல் கேக்கறத்துக்கு வெட்கமாயிருக்கே!) - . . "