பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 115 "இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு' (1054) என்னும் குறள் பாக்கள் ஈண்டு எண்ணத்தக்கன. . அகலிடைப் படலம் பொன்னியும் கங்கையும் : மும்மூர்த்திகள் என்னும்படி மூவராக உள்ள விசுவாமித்திரர், இராமன், இலக்குமணன் ஆகியோர் காட்டில் செல்லும் வழியில் கங்கை யாற்றைக் கண்டனராம்: 'அங்குநின் றெழுந்து அயன்முதல் மூவரும் அனையார் செங்கண் ஏற்றவன் செறிசடைப் பழுவத்தில் நிறைதேன் பொங்குகொன்றை ஈர்த்து ஒழுகலால் பொன்னியைப் பொருவும கங்கை என்னும் அக்கரை பொருதிரு நதிகண்டார்' (5) தொண்டரடிப்பொடியாழ்வார் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள திருமாலை என்னும் தமது நூலில், காவிரிக்குக் கங்கையை ஒப்புமையாகக் கூறினார் பாடல்: "கங்கையின் புனித மாய காவிரி நடுவு பாட்டுப் பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம் (894) ஆனால், கம்பர் தமது பாடலில், பொன்னியைப் பொருவும் கங்கை’ எனக் கங்கைக்குக் காவிரியை ஒப்புமையாக்கிக் காட்டியுள்ளார். பொன்னி - காவிரி. கங்கைக்கும் காவிரிக்கும் ஒப்புமையில் உள்ள பொதுத் தன்மை உருவாகும். கங்கையும் பொன்னிறமாகத் தோன்று கிறதாம் - காவிரியும் பொன்னிறம் கலந்தது. கங்கைக்குப் பொன்னிறம் கலந்தது எப்படியாம்? கங்கை விண்ணிலிருந்து சிவன் தலையில் (முடியில்) விழுந்து, பின்னர்ச் சிவன் தலையிலிருந்து மண்ணில்