பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பால காண்டப் இடுப்பு மடிப்பு விழுந்து படுத்திருப்பவர்களால் வளைந்து தெளிந்து ஆட முடியாது; இருக்கிறதோஇல்லையோ என ஐயுறும்படி மிகவும் மெல்லிய இட்ை உடையவர்களாலேயே ஆட முடியும் என்பதை ஐய நுண் இடையார்’ என்னும் பகுதி அறிவிக்கிறது. உறுப்புகளின் செயல்களெல்லாம் ஒ ன் றோ .ெ டா ன் று ஒத்த கருத்துடையனவாய் அமைந்திருக்க வேண்டும் என்பதும் இப்பாடலால் புலனாகிறது. பொன்னி அன்ன ஆவணம் : மிதிலையின் கடைத்தெருக்களில், மணி, பொன், ஆரம், கவரிவால், அகில், மயில் தோகை, யானைத் தந்தம் முதலிய பொருள்கள் இருமருங்கிலும் உள்ளன வாம். பொன்னியின் (காவிரியின்) இருகரைகளிலுங்கூட, இப்பொருள்கள் நீரால் அடித்துக் கொண்டு வரப்பட்டு இரு கரைகளிலும் ஒதுங்கியுள்ளனவாம். கடைத்தெருவிற்குப் பொன்னி இவ்வாறு ஒப்புமையாக்கப்பட்டுள்ளது. 'வரப்பறு மணியும் பொன்னும் ஆரமும் கவரி வாலும் சுரத்திடை அகிலும் மஞ்ஞைத் தோகையும் தும்பிக்கொம்பும் குரப்பணை கிரப்பும் மள்ளர்குவிப்புறக் கரைகள்தோறும் பரப்பிய பொன்னி அன்ன ஆவணம் பலவும் கண்டார்' (10) தும்பிக் கொம்பு=யானைத் தந்தம், ஆவணம் = கடைத் தெரு. பொன்னியின் கரைகளில் ஒதுக்கப்பட்டுள்ள இப்பொருள்களை, உழவர்கள் நீர் மடை அடைக்கப் பயன்படுத்துவார்களாம். (காவிரிக்கரை வயல்களில், நீர் மடையை மண்-சேற்றால் அடைக்காமல், அகத்திக்கீரைக் கற்றையால் அடைத்ததை யான் நேரில் பார்த்திருக் கிறேன்). மிதிலை பற்றிக் கூறும் கம்பர் தமிழ்க் காவிரியை மறந்தாரிலர்.