பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 121 பந்தாட்டம் : மங்கையர் பந்தாடியதை மூவரும் கண்டனர். ஆடவர் தம்மோடு உடலுறவு கொள்ளுங்கால் அவர்களைப் போலவே தாமும் காம இன்பம் துய்த்துப் பின் அவர் களிடமிருந்து பொருளையும் பறித்துக் கொள்ளும் விலை மகளிரின் உள்ளமும்,பளிங்கும்,பந்துகட்கு உவமையாக்கப் பட்டுள்ளன. "மெய்வரு போகம் ஒக்க உடன்உண்டு விலையும் கொள்ளும் பை.அரவு அல்குலார்தம் உள்ளமும் பளிங்கும் போல மைஅரி நெடுங் கண் நோக்கம் படுதலும் கருகி வந்து கைபுகின் சிவந்து காட்டும் கந்துகம் பலவும் கண்டார்’ (16) விலைமாதர் வருபவர்கட்கு ஏற்ப நடந்து கொள்பவர்; எவர் வரினும் பொருளுக்குத் தம் உறுப்பை விற்று, மீண்டும்அவ்வுறுப்பைத் தம்முடைய தாக்கி மற்றொருவர்க்கு விற்பவர்.

விற்றிடும் அல்குல் தன்னை மீளவும் தமதே யாக்கி

மற்றைய நாளும் விற்கும் வரைவிலார்' என்னும் காஞ்சிப் புராணப் பாடல் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. பளிங்கும் தனக்கென ஒரு நிறம் இன்றி, எதிரே தெரியும் நிறத்தைக் காட்டக்கூடியது. அடுத்தது காட்டும் பளிங்கு” என்பது வள்ளுவம். விலை மகளிரின் உள்ளமும் பளிங்கும் போல் பந்துகளும் ஒரு தன்மைத்தாய் இல்லை. இவை வெண்ணிறப் பந்துகள். ஆடும் பெண்கள் அவற்றைத் தம் கரிய கண்களால் பார்க்கும்போது பந்துகளும் கருமை யாய்க் காணப்படுகின்றனவாம். அவர்கள் தம் சிவந்த உள்ளங்கைகளால்பற்றும்போது பந்துகளும் செந்நிறமாய்த் தோன்றுகின்றனவாம். பந்துகளைக் கொண்டு விலை மகளிரைச் சாடியுள்ளார் கம்பர்.