பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 பால காண்டப் 'அன்றுமுதல் இன்றளவும் ஆரும் இந்தச் சிலையருகு சென்றுமிலர் போயொளிந்த தேர்வேந்தர் திரிந்துமிலர் என்றுமினி மணமு மிலை என்றிருந்தோம் இவன் ஏற்றின் நன்று மலர்க்குழல் சீதை நலம் பழுதாகாது என்றான்' (24) எவரும் வில்லை வளைத்து நாண் ஏற்றவில்லை எனில், சீதைக்கு மணம் ஆகாது: எனவே, அவளது பெண்மை நலம் எந்த ஆடவராலும் துய்க்கப் பெறாமல் வீணாகி விடும்.என்பது கருத்து. மணமாகாத பெண்ணின் நலம் வீணாகும் என்னும் கருத்து, நகரப் படலத்தில் அகழியைப் பற்றிக் கூறியுள்ள பாடலிலும் வந்துள்ளது. 'கன்னியர் அல்குல் தடமென யார்க்கும் படிவு அரும் காப்பின தாகி' என்பது இந்தப் பகுதி. ஈண்டு, மிகநலம் பெற்றாள் தமியள் மூத்தற்று' என்னும் குறள் பகுதியும் நினைவு கூரத்தக்கது. தோகையின் ஆடல்: இராமன் வில்லில் நாண் ஏற்றியதும், சீதைக்கு மணம் நடைபெறும் என்ற மகிழ்ச்சியால், மங்கையர், முகில்கள் தோன்றியதும் அதற்கேற்றதாகச் சொல்லப்பட்ட கார்ப் பருவம் வந்து விட்டது என்று நோக்கி மகிழ்ந்து ஆடும் மயில்களைப் போல நடனம் ஆடினராம்: 'எல் இயல் மதியம் அன்ன முகத்தினர் எழிலி தோன்றச் சொல்லிய பருவம் நோக்கும் தோகையின் ஆடினாரே' (37) மதியம் அன்னமுகத்தினர் = திங்களன்ன முகமுடைய மங்கையர். மயில்கள் நடம் ஆடின், முகில் இடித்து மழை சொரியப் போகிறது என எண்ணலாம் என்னும் கருத்து ஞான சம்பந்தரின் திருவையாற்றுப் பதிகத் தேவாரத்தில் மிகவும் சுவையாகக் கூறப்பட்டுள்ளது. திருவையாற்றுத் திருக்கோயில் திருச்சுற்றில் (சுற்றுப் பிரகாரத்தில்) பெண்கள் வலம் வந்தார்களாம். முழவு