பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 137 பல்லியல் நெறியின் பார்க்கும் பரம்பொருள் என்ன யார்க்கும் இல்லை உண்டு என்ன கின்ற இடையினுக்கு இடுக்கண் செய்தார்" (12) கனகச் செப்பு = பொன் குடம்-கொங்கையாகிய பொன் குடம். கொங்கைகளின்மேல், கொடி போலவும் மன்மதனின் கரும்பு வில் போலவும் மான்மதச் சாந்தால் எழுதினார்களாம். இதற்குத்த் தொய்யில் எழுதுதல் என்று பெயராம். பல் இயல் நெறியில் பார்த்தல் என்றால், துவிதம், அத்துவிதம், சைவ சித்தாந்தம்-நாத்திகம் என்னும் உலகாயதம் முதலிய பல கோணங்களில் கடவுளைப் பற்றி ஆய்தல் ஆகும். கடவுள் இல்லை என்னும் கொள்கையினர் கம்பர் காலத்திலேயே இருந்தனர் என்பது புலப்படுகிறது. அவ்வளவு ஏன்? கடவுள் இல்லை என்னும் கொள்கை எழுந்ததனால்தான், கடவுள் உண்டு என்னும் கொள்கை எழுந்திருக்க வேண்டும். 'உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும்' (850) - என்னும் குறள் ஈண்டு ஆராயத்தக்கது. கஞ்சும் அமிழ்தும் சீதையின் கண்கட்கு மை தீட்டினார்களாம். அக்கண் கள், ஒன்றுக்கு ஒன்று எதிர்மாறான நஞ்சும் அமிழ்தமும் சேர்த்து அமைக்கப்பட்டனவாய்த் தோன்றினவாம். அதாவது,இராமன் அந்தக் கண்ணின் குறும்புப்பார்வையை எண்ணி ஒரு நேரம் வருந்துகிறானாம். இன்னொரு நேரம் அதன் இனிய-குளிர்ந்த பார்வையை எண்ணி மகிழ் கின்றானாம். இங்கே, இப்பெண்ணிடம் இரு நோக்கு காண்கிறேன்; ஒரு நோக்கு வருத்தம் தரும் நோய் நோக்கு;மற்றொன்று அந்நோய்க்கு மருந்துபோன்ற இனிய நோக்கு' என்னும் பொருள் பொதிந்த நோக்கு என்னும் கருத்தமைந்த