பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பால காண்டப் 'இருநோக்கு இவள் உண்கண் உள்ளது ஒருநோக்கு நோய் நோக்கு ஒன்று அங்நோய் மருந்து' (1091) என்னும் குறள் கருத்தைக் கம்பர் உள்ளத்தில் கொண்டு, கஞ்சினோடு அமுதம் கூட்டி நாட்டங்கள் ஆன என்ன .............மதர்த்த கண்கள்' (15) எனப்பாடியுள்ளார். மற்றும், கம்பரே, பூக்கொய் படலத்தில் 'நஞ்சினும் கொடிய நாட்டம் அமுதினும் நயந்து நோக்கி' (7) எனக் கூறியுள்ளார். மற்றும், சிந்தாமணியில் உள்ள "நஞ்சும் அமிர்தமுமே போல் குணத்த' (167) என்னும் பாடல் பகுதியும், திருக்கோவையாரில் உள்ள "பிணியும் அதற்கு மருந்தும் பிறழப் பிறழ மின்னும் பணியும் புரை மருங்குல் பெருந்தோளி படைக் கண்களே' (5) என்னும் பாடல் பகுதியும் ஈண்டு ஒப்பு நோக்கற் பாலன. கடிமணப் படலம் அஞ்சியவர் பழி: இரவில் சீதையை எண்ணி உறக்கம் வராமல் இராமன் பிதற்றுகிறான். இரவு, என் உயிரை வருத்தும் அந்தப் பெண்ணின் (சீதையின்) கண்களைப்போல் நீண்டு வளர்கின்றது. இருட்டு போரில் தன் தலைவன் மடிய, அஞ்சிப் புறமுதுகிட்டோடும் கோழை மறவனது பழி போல் நீண்டு வளர்ந்துகொண்டிருக்கிறது. இன்னும் விடிய வில்லை. 'கழியா உயிர் உந்திய காரிகைதன் விழிபோல வளர்ந்தது; வீகிலதால் அழிபோர் இறைவன்பட அஞ்சியவன் பழிபோல வளர்ந்தது பாயிருளே’ (15)