பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 139 விழி போல வளர்தல்= காதுவரையும் நீண்டு வளர்ந் துள்ள விழிபோல் (விசாலாட்சி) இரவு நீள்கிறது. மற்றும்: சீதையின் கண்நோக்கு இராமனது மனக் கண்ணிலிருந்து மறையாமல் தொடர்ந்து தெரிந்து கொண்டிருக்கின்றது. போரில் அஞ்சிப் புறமுதுகிட்டு ஓடும் கோழையைப் பலரும்-பல காலத்தும் பல இடங்களிலும் பழிப்பர். உயிர் உள்ள மக்களினம் பழிப்பது மட்டுமன்று; துணிவோடு போரிட்டு மறச்சர்வு (iரமரணம்) எய்திய மறவர்களைப் புதைத்த இடங்களின் மேல் அவர்களின் பெயரும் பெருமையும் பொறித்துக் கல் நட்டுள்ளார்கள் அல்லவா? அந்த நடுகற்கள் கூட, அந்த வழியாக அஞ்சி ஒடும் கோழைகளைப் பார்த்து ஏ.சி இகழுமாம். இந்தச் சுவையான கற்பனைக் கருத்து, இரணிய முட்டத்துப் பெருங்குன்றுார்ப் பெருங் கெளசிகனார் என்னும் புலவர் பாடிய மலைபடு கடாம் என்னும் நூலில் உள்ளது:

    • நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர் செல்லா நல்லிசைப் பெயரொடு நட்ட கல்ஏசு கவலை எண்ணுமிகப் பலவே (387–89)

என்பது பாடல் பகுதி. ஈண்டு, கல் ஏசு என்பது, நடுகற் கள் எள்ளி ஏசுவதானை பொருளைத் தருகிறது. உண்மை யில் கல் ஏசுமா? யாம் ஒன்றும் இலோம் என்று சோம்பல் உற்றிருப்பவரை நோக்கி நிலம் என்னும் பெண் நகுவாள் என்னும் கருத்துடைய "இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் கிலமென்னும் நல்லாள் நகும் (1040) என்னும் குறளில் உள்ள நிலம் நகும்' என்பது போல, 'கல் ஏசும்’ என்பதையும் கொள்ளல் வேண்டும். இராமனின் பண்பு : திருமணம் ஆனதும் இராமன் சீதையுடன் சேர்ந்து அன்னையர் மூவரையும் வணங்கினான். பரதனின் தாயும்