பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 145, "ஆலைவாய்க் கரும்பின்தேனும், அரிதலைப் பாளைத்தேனும் சோலைவாய்க் கனியின் தேனும் தொடைஇழி இறாலின் தேனும், மாலைவாய் உகுத்த தேனும் வரம்பிகந்து ஓடி வங்க வேலைவாய் மடுப்ப உண்டு மீன் எலாம் களிக்கும் மாதோ?? (9) பாளையைத் தலையில் கத்தியால் சீவி (அரிந்து) விடுவார்களாதலின் அரிதலைப் பாளை’ எனப்பட்டது. இறால் = தேனடை, வங்கம் = கப்பல். வேடர்கள் தேன் கூட்டின் மேல் அம்பு எய்வார்கள். அம்பின் நுனியில் நூல் கயிறு கட்டியிருப்பார்கள், அம்பு தேன் கூட்டைத் துளைத்ததும் தேன் அந்தக் கயிறு வழியாகக் கீழ் நோக்கி இழியும். அதனால்தான், 'தொடை இழி இறாலின் தேன்' எனப்பட்டது. வங்க வேலை என்றதும் இப்போது வழங்கப்படும் வங்காளக் (வங்கக்) குடாக்கடல் நினைவுக்கு வரலாம். கம்பர் கூறியுள்ள வங்கம் என்பதன் பொருள் கப்பல் என்பதாகும். பாலும் தாலாட்டும் : மங்கையர்போல் நடமாடும் தாய் அன்னம் பண்ணை யில் உள்ள தாமரை மலராகிய படுக்கையில் தன் குஞ்சை உறங்கக் கிடத்திற்று. நீரிலே கிடக்கும் எருமை தன் கன்றை நினைத்துச் சொரிந்த பாலை அந்த அன்னக் குஞ்சு பருகுகின்றது. பின்னர்த் தவளைகள் தாலாட்ட அவை உறங்கின. சேலுண்ட ஒண் கணாரின் திரிகின்ற செங்கால் அன்னம் மாலுண்ட நளினப் பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை காலுண்ட சேற்று மேதி கன்று உள்ளிக் கனைப்பச் சோர்ந்த பால் உண்டு துயிலப் பச்சைத் தேரை தாலாட்டும் பண்ணை' (13).