பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 149 இதற்கு வேறு காரணம் இருப்பதாகப் புராணக் கதை கூறுகிறது. திங்கள்மேல் சினம் கொண்ட தக்கன் என்பவன், நீ ஒவ்வொரு கலையாய்த் தேய்ந்து அழிந்து போவாயாக எனக் கெடுமொழி (சாபம்) இட்டானாம். அதன்படி ஒவ்வொரு கலையாய்த் தேய்ந்து மீதியாக ஒரே கலை இருந்தபோது, திங்கள் சிவனிடம் சென்று முறையிட்டு வேண்டிக் கொண்டானாம். சிவன் நோக்கி, நீ ஒவ்வொரு கலையாய் வளர்ந்து முழுமை பெறுவாய்மீண்டும் தக்கனது கெடுமொழிப்படி ஒவ்வொரு கலையாய்த் தேய்வாய்ட இவ்வாறு மாறி மாறியிருப்பாயாக என்று அருளியதால் தேய்பிறையும் வளர்பிறையும் மாறி மாறி வருகின்றனவாம். இது புராணக் கதை. கம்பர் இதற்கு வேறொரு காரணம் தன் குறிப்பாகக் கூறுகிறார்: உயரமான மலைகளின் மேல் உள்ள வாழை மரங்கள் போல, அயோத்தியில் வானம் வரையும் உயர்ந்திருக்கும் மாட மாளிகைகளின் மேல் நிரம்பக் கொடிகள் கட்டப்பட்டுப் பறக்கின்றனவாம். அக்கொடிகள் முழுத் திங்களைத் தேய்த்துக் கொண்டே இருப்பதால் தேய்பிறை உண்டாயிற்றாம்: காண்வரு நெடுவரைக் கதலிக் காணம்போல் தாணிமிர் பதாகையின் குழாம் தழைத்தன வாணனி மழுங்கிட மயங்கி வைகலும் சேண்மதி தேய்வது அக்கொடிகள் தேய்க்கவே' (37) கதலி= வாழை. பதாகை=கொடி. ஆசிரியர், இயற்கை யான ஒரு காரணம் இருக்க, அதைவிட்டுத் தானாக ஒரு காரணத்தைக் குறித்து ஏற்றியதால், இதைத் தற்குறிப்பு ஏற்ற அணி’ என ஒருவகையில் கூறலாம். இமையா ஒவியம்: அயோத்தி நகர்ப் பெண்கள் ஒளி விளக்குபோல் 'பள பள’ என்று மின்னுகின்றனர். அவர்களின் அழகை ஒவியங்களும் பார்க்க விரும்பின; அதனால் அவை திறந்த பா-10