பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 பால காண்டப் முழவு - அசோக- மலர்கள் - விளக்குகள்-மலர் யாழ் வண்டொலி பாடல்-இந்த அமைப்புகளுடன் நடம் ஆடுவது மயில். இவ்வாறு ஓர் ஆடல் அரங்கு நடைபெற்றது: "வரம்பில் வான்சிறை மதகுகள் முழவொலி வழங்க அரும்பு நாண்மலர் அசோகுகள் அலர் விளக்கு எடுப்ப, நரம்பின் கான்ற தேன் தாரை கொள் நறுமலர் யாழின், சுரும்பு பாண் செயத் தோகை கின்றாடுவ சோலை' (7): இந்தப் பாடலில், ஆடலுக்கு ஏற்ற பக்க இசைக்கருவி கள் புதுமையாகக் கூறப்பட்டுள்ளன. வரைக் காட்சிப் படலம் உடுபதி ஆடி: தயரதனுடன் மிதிலை சென்றவர்கள் வழியில் சந்திர சயிலம் என்னும் மலைப் பகுதியை அடைந்தனர். அம்மலை உச்சியைத் தாண்டிப் போக முடியாமல் திங்கள் உச்சியில் அப்படியே நின்று விட்டதாம். உச்சியில் திங்கள் கண்ணாடிபோல் இருந்தது. திங்களின் அப்புறத்து இருந்த தெய்வமகளிர் திங்களின் அப்புறத்திலே தம் அழகைக் கண்டனராம். திங்களின் இப்புறத்திலே இருந்த மலைவாழ் மகளிர் திங்களின் இப்புறத்திலே தம் அழகைக் கண்டனராம். பகுப்புறற்கு அருமையான குலவரைச் சாரல் வைகி ஒப்புறத் துளங்கு கின்ற உடுபதி ஆடியின்கண் இப்புறத்தேயும் காண்பார் குறத்தியர் இயைந்த கோலம்; அப்புறத் தேயும் காண்பார் அரம்பையர் அழகு மாதோ' (5) அசுவனி முதல் இரேவதிவரை உள்ள இருபத்தேழு விண்மீன்களாகிய (உடுக்களாகிய) பெண்களின் கணவன் (பதி) திங்களாம். அதனால் உடுபதி என்னும் பெயர் ஏற்பட்டது. உலகில் கண்ணாடி ஒரு புறம் தெரிவதே