பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பால காண்டப் வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினிர் என்று' (1317) 'தும்முச் செறுப்ப அழுதாள் நூமர் உள்ளல் எம்மை மறத்திரோ என்று' (1318) தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர் இங்கீரர் ஆகுதிர் என்று' (1319) 'கினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினிர் என்று' - (1320) இந்தக் குறள்களில் உள்ள அடிப்படைக் கருத்து போலவே, கம்பர் பாடல்களிலும் கருத்து அமைந் திருப்பதைக் காணலாம். கம்பரின் மற்றும் சில பாடல் களிலும் இத்தகைய ஊடல் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்டாட்டுப் படலம் நீயே உண்ணுதி: மிதிலை நோக்கிச் செல்பவர்கள் வழியில் உண்டு மகிழ்கிறார்கள். பெண் ஒருத்தி தன் மதுக் கிண்ணத்தில் தனது நிழல் தெரிய, அதை வேறொரு பெண்ணென்று எண்ணி, தோழியே! நீயே இந்த மதுவை உண்பாயாக என்றாளாம். எனவே, நஞ்சொத்த கண்ணையும் அமிழ் தொத்த இன்சொல்லையும் உடைய மடவாரின் மடமையை விட வேறு பெரிய மடமை உண்டோ? (இல்லை)

  • விடன் ஒக்கும் நெடிய நோக்கின் அமிழ்து ஒக்கும்

இன்சொலார்தம், மடன் ஒக்கும் மடமை உண்டோ வாள்நுதல் ஒருத்தி காண, தடன் ஒக்கும் கிழலைப் பொன்செய் தண் நறும் தேறல் வள்ளத்து உடன் ஒக்க உவந்து நீபே உண்ணுதி தோழி என்றாள்' (10)