பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.#60 பால காண்டப் தோழியின் துணையை நாடினாள். இது, அழகிய ஒரு கற்பனையாகும். இதுபோன்ற கருத்தமைந்த பாடல் ஒன்று முத்தொள்ளாயிரம் என்னும் நூலில் உள்ளது. பாண்டிய மன்னன் ஒருத்தியின் கண்வழியே புகுந்து விட்டானாம். அவளது உயிரைப் போக்குவதாயினும், கண்ணைத் திறக்க மாட்டாளாம்-திறந்தால் ஓடி விடுவானாம். "தளையவிழும் பூங்கோதைத் தாயரே ஆவி களையினுமென் கண்திறந்து காட்டேன் வளை கொடுபோம் வன்கண்ணன் வாள்மாறன் மால்யானை தன்னுடன் வந்து என்கண் புகுந்தான் இரா' (38) என்பது அந்தச் சுவையான பாடல் இவ்வாறாகக் கம்பரின் பால காண்டத்தில் பல கற்பனைக் கனிகள் இன்சுவை அளித்துக் கொண்டுள்ளன. இனி அடுத்த பழுமரம் காணலாம்.