பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 167 வேள்விப் படலம் பெண்டிரின் தெய்வம்: விசுவாமித்திரர், இராம-இலக்குமணர் ஆகிய மூவரும் காட்டில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்ப்பட்ட ஒரு சோலையின் சிறப்பைப் பற்றி முனிவன் கூறலானான்: தங்கள் கணவரினும் சிறந்த தெய்வம் வேறு இல்லை என்று எண்ணும் மங்கையரின் மனம் போல் இந்தச் சோலை மிகவும் தூய்மையானது-என்றார்: தங்கள் நாயகரின் தெய்வந்தான் பிறிது இலை என்றெண்ணும் மங்கைமார் சிங்தை போலத் தூயது, மற்றும் கேளாய்' (6) என்பது பாடல் பகுதி. இது, தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை' (55) என்னும் குறள் கருத்தை அடிப்படையாகக் கொண் டுள்ளது. தங்கள் நாயகரின்’ என்பதின் இறுதியில் உள்ள 'இன்' என்பது ஐந்தாம் வேற்றுமை உருபு. இதற்கு, தங்கள் நாயகரைப் போல் சிறந்த தெய்வம் வேறு இல்லை என்று ஒப்புப் பொருளாகப் பொருள் கொள்வதினும், தங்கள் நாயகரைக் காட்டிலும் சிறந்த தெய்வம் வேறு இல்லை என்று எல்லைப் பொருள் கூறுவது மிகவும் நயமுடையது. இந்தக் காலத்தில் புரட்சியாளர்கள் சிலர் இந்தக் கருத்தை ஒத்துக் கொள்ளத் தயங்குவர். இது காலத்தின் கோலம். இந்தப் பகுதி, பண்டைய தமிழ் நாட்டைப் படம் பிடித்துக் காட்டுகிறது என்ற அளவில் அமையலாம். கொள்ளலும் கொடுத்தலும்: விசுவாமித்திர முனிவரும் இராம இலக்குமணரும் காட்டில் சென்று கொண்டிருந்தபோது, முனிவர்