பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 13 அறிவித்துள்ளார். அப்படியே குற்றம் குறை இருப்பினும் உத்தமர்கள் பொருட்படுத்தார் என்பதையும் புலப்படுத்து கிறது இது. அவர் கற்றுத் துறை போகியவர்' என்பதாக யாரையாவது புகழ்பவர் கூறும் துறை போதல்’ என்னும் தொடர், துறையின் முறை போகிய என்னும் கம்பரின் ஆட்சியிலிருந்து கற்றுக் கொண்டதாக இருக்குமோ! யாழும் பறையும்: பல துறைகள் பற்றிய பாடல் தொகைகளைக்(பாமாலை களைக்) கேட்டறிந்த கல்வியாளர்களின் செவிகளில் என் பாக்கள் ஒலிப்பது, யாழ் இசைக்கு மயங்குகின்ற அசுணம் நையும்படி பறை ஒலிப்பது போன்றதாகும்! 'துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு உறை அடுத்த செவிகளுக்கு ஒதில், யாழ் நறை அடுத்த அசுண நன்மாச் செவிப் பறை அடுத்தது போலும் என் பா அரோ' (7) தொகைக் கவி' என்பது, முற்காலத் தமிழ் நூல்கள் பல தொகை நூல்களாக இருப்பதைக் குறிக்கின்றதோ? அசுணத்தைப் பிடிப்பதற்கு முதலில் தேன் அனைய இனிய யாழை இசைப்பார்களாம். அவ்வொலி கேட்ட அசுணம் அருகில் வந்து இசையைச் சுவைத்துக் கொண்டிருக்குமாம். உடனே வெடியோசைபோல் பறை மேளம் அடித்ததும் அசுணம் செயலற்றுப் போகுமாம். அப்போது அசுணத் தைப் பிடித்துக் கொள்வார்களாம். அசுணம் பறவையா?- விலங்கா?- என மயங்குவார் உளர். கம்பர், அசுணமா எனக் கூறியிருப்பதிலிருந்து அசுணம் விலங்கு என்பது புலப்படும். அமெரிக்காவின் ஒரு பகுதியில், செவ்விந்தியர்கள் ஒரு பறவையைப் பிடிப்பதற் காக, ஒரு சிறு திடலைச் சுற்றி உயரமான வேலி கட்டுவார் களாம். அதன் உள்ளே இருந்தபடி இன்னிசை எழுப்புவார் களாம் அப்பறவை வேலிக்குள் வந்து இசையை மெய்ம் மறந்து நுகருமாம். அந்நேரத்தில் வல்லோசை எழுப்பி