பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 பால காண்டப் கோலம் காண் படலம் ஏழுமலை இறுத்தல் : திருமணம் செய்யச் சீதையை அணி செய்து அழைத்து வந்தனர். சீதையின் பேரழகைக் கண்டு வியந்த விசுவாமித்திரர், பச்சை மலை போன்ற நிறமுடைய இராமன், இவ்வளவு சிறந்த பெண்ணை மணப்பதென்றால், மேருமலையாகிய ஒரு வில் என்ன-ஏழு மலைகளையும் இற்று விழச் செய்வானே- என்றார். 'அச்சென நினைத்த முதல் அந்தணன் கினைந்தான் பச்சை மலை ஒத்த படிவத்து அடல் இராமன் கச்சுடை வடிக்கண் மலர் நங்கை இவள் என்றால் இச்சிலை கிடக்க, மலை ஏழையும் இறானோ?' (36) சிவன் மேரு மலையை வில்லாக வளைத்தானே-அந்த மலை வில்தான் சனகனிடம் இருந்தது. அதைத்தான் இராமன் நாணேற்றி ஒடித்தான். பேரழகியாகிய சீதையை மணப்பதற்கு, இந்த ஒன்றென்ன.ஏழுமலைகளையும் ஒடிக்கச் சொல்லினும் இராமன் ஒடித்து விடுவானாம். உலகியலில், இந்த அழகிய மணமகளுக்கு இன்னும் எவ்வளவு நகை கேட்பினும் போடலாமே என்று சொல்வது போல் உள்ளது இது. 'பச்சை மாமலை போல் மேனி” எனத் தொண்டரடிப் பொடி ஆழ்வாரால் போற்றப்பட்ட திருமாலின் தெய்வப் பிறவி இராமன் ஆதலின், பச்சை மலை ஒத்தபடிவம்’ என்றார் கம்பர். மலைகள் எட்டு; அவை: கைலை, இமயம். மேரு, விந்தம், நிடதம், ஏமகூடம். நீலகிரி, கந்தமாதனம் என்பன. இவற்றுள் மேருமலையாகிய வில்லை இராமன் ஒடித்து விட்டதால்,மற்ற ஏழுமலைகளையுங்கூட அவனால் ஒடிக்க முடியும் என்பதாக முனிவர் கூறினார்.