பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 பால காண்டப் நான் விண்ணிலேயே உயிர்கள் நிறைந்த ஓர் உலகத்தை .யும், தேவர்களையும் நான்முகனையும் படைப்பேன் என்று கூறி, சுவர்க்கம் போன்ற ஓர் உலகை விண்ணிலே படைத்து, திரிசங்குவை அதில் இருக்கச் செய்தாராம். இந்தப் புராணக் கதைப் பகுதி பின்வரும் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது: 'மடங்கல்போல் மொய்ம்பினான் முனனர், மன்னுயிர் அடங்கலும் உலகும்வேறு அமைத்துத் தேவரோடு இடங்கொள் நான்முகனையும் படைப்பன் ஈண்டெனாத் தொடங்கிய துணி உறு முனிவன் தோன்றினான்' (4) தயரதனிடம் இராமரை அனுப்பும்படிக் கேட்க வந்த விசுவாமித்திரர் இத்தகையவர் எனக் குறிப்பிடப் பட்டுள்ளார். மாவலி பற்றிய புராண வரலாறு, இந்நூலில் ஒட்டு மாங்கனி' என்னும் தலைப்பில் கூறப்பட்டுள்ளது. வரலாற்றுப் படலம் என்னும் பகுதியில், இராமனுடைய முன்னோர்களின் வரலாறு கூறப்பட்டுள்ளது. இஃதும் புராண வரலாறு போலவே உள்ளது. கார்முகப் படலம் வில்லின் வரலாறு: சனகனிடம் உள்ள வில்லின் வரலாற்றைச் சதானந்த முனிவர் அவையோர்க்குக் கூறுகின்றார்: தக்கன் தனக்கு மகளாக வந்த உமாதேவியை, சிவனிடம் உள்ள வெறுப்பு காாணமாகத் தான் செய்த வேள்வியின்போது வரவேற்காமல் வெளியேற்றினான். மேருவை வில்லாக வளைத்த சிவன் இதையறிந்து தக்கன் வேள்வியை அழிக்கலானார். வேள்வி காண வந்த தேவர் க்ளுள் சிலர் பல் உடைக்கப்பட்டனர்; சிலர் கையறுக்கப் பட்டனர்; சிலர் அஞ்சி ஒடி ஒளிந்தனர். வேள்வித் தீயும்