பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 193 அணைந்தது; சிவனது சினத்தீயும் அணைந்தது. பின் சிவன், மேருமலையாகிய வில்லை, சனகனது. முன்னோனாகிய தேவராசன் என்பவனிடம் அளித்தார். அதுதான் வழி வழியாக வந்து சனகனிடம் உள்ளது. என்று சதானந்த முனிவர் கூறினார். இமைய வில் வாங்கிய ஈசன் பங்கு உறை உமையினை இகழ்ந்தனன் என்ன ஓங்கிய கமம் அறு சினத் தனிக் கார்முகம் கொளா சமை உறு தக்கனார் வேள்வி சாரவே' (12)

  • உக்கன பல்லொடு, கரங்கள் வீழ்ந்தன

புக்கனர் வானவர் புகாத சூழல்கள் தக்கன்தன் வேள்வியின் தழலும் ஆறின முக்கண் எண் தோளவன் முனிவம் ஆறினான் (13).

  • தாளுடை வரிசிலை சம்பு உம்பாதம்

நாள் உடைமையின் அவர்நடுக்கம் நோக்கி இக் கோளுடைய விடை அனான் குலத்துள் தோன்றிய வாளுடைய உழவன் ஓர் மன்னன்பால் வைத்தான்’ (14). இமைய வில் வாங்கிய ஈசன் = மேரு மலையை வில்லாக வளைத்த சிவன். இமையம் = இமயம்= இடைப்போலி. இமையம்-மந்தரம்-மேரு என்பன ஒன்று போல் கூறப் படுவதுண்டு. சம்பு = சிவன். கோளுடை விடை அனான் = சனக. மன்னன். வாளுடை உழவன் = தேவராசன் என்னும் முன்னோன். போர்க் களத்தில் வாளால் போர் புரிகின்ற மன்னரை வாளுடை உழவர்' எனல் மரபு இங்கு, சிலப்பதிகாரத்தில் உள்ள