பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 203 மலையாகிய தம் மாமனார் ஞாயிற்றின் கொடுமையால் வெப்பமுற்று வருந்துவார்-நாம் மழைத் தண்ணிரால் மாமனாரது (மலையின்) வெப்பத்தைத் தணிக்க வேண்டும் எனக் கருதி, நீராவியாக மேலே போய் முகிலாகி மலை உச்சியை அடைந்து பெய்கிறதாம். இந்த மாமனார்மருகன் ஒப்புமை மிகவும் சுவையாயுள்ளது. இயற்கையாகக் கடல் நீர் முகிலாகி மலை உச்சியை அடைந்து மழை பெய்வதை, மாமனாரின் வெப்பத்தைத் தணிப்பதற்காகத்தான் இவ்வாறு செய்கிறது எனப் புலவர் தாமாக ஒரு காரணத்தைக் குறித்து ஏற்றியுள்ளதால், இப்பாடலைத் தற்குறிப்பு ஏற்ற அணி அமைந்த பாடலாகக் கூறலாம். வெள்ளமும் விலை மாதரும்: மழைவெள்ளம் மலையின் உச்சி (தலை)-நடுப்பகுதிஅடிவாரம் ஆகிய எல்லா இடங்களிலும் உள்ள பொருள் களையெல்லாம் அடித்துக் கொண்டு வந்து அங்கு நில்லாமல் விரைந்து ஓடியதாம்.இது விலைமகளிரின் நிலை போன்றது. 'தலையும் ஆகமும் தாளும் தjஇ அதன் நிலை கிலாது இறை கின்றது போலவே மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால் விலையின் மாதரை ஒத்தது வெள்ளமே' (6) இறை = சிறிது நேரம், மண்டல் = விரைந்து போதல். விலைமகளிர் தம்மிடம் வந்த ஆடவரின் தலையைத் தழுவி (தட வி) முத்தமிட்டும், உடம்பைக் கட்டித் தழுவி அணைத்தும், காலைத் தொட்டு வணங்கியும் அல்லது காலைப் பிடித்து விட்டும் நடித்து அவரிடம் உள்ள பொருள்களையெல்லாம் பறித்துக் கொண்டு, பின்னர் அவரோடு சிறிதும் தொடர்பின்றி அவரை விட்டு விரைவில் நீங்குவர். இதனால், விலை மாதர் வெள்ளநீருக்கு ஒப்புமையாக்கப்பட்டனர். சரயு ஆற்று வெள்ளத்தின்