பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 பால காண்டப் செயலுக்கு இவ்வாறு இன்னும் பலஉவமைகள் கூறியுள்ளார் கம்பர் பெருமான். தாடகை வதைப் படலம் உலோபம் : கடும்பற்று உள்ளம் (உலோபம்) என்னும் தீயகுணம் ஒன்றுமே எல்லா நற்குணங்களையும் அழித்தல் போல், தாடகை என்பவள் வளமான மருத நிலத்தைக் கொடிய பாலை நிலமாக்கி விட்டாளாம்: உேளப்பரும் பிணிப்பறா உலோபம் ஒன்றுமே அளப்பரும் குணங்களை அழிக்கு மாறுபோல் கிளப்பருங் கொடுமையை அரக்கி கேடிலா வளப்பரு மருதவைப்பு அழித்து மாற்றினாள்' (24) கொடியவன் ஒருவனைக் குறிப்பீட்டு, அவன் இருக்கும் இடத்தில் புல் கூட முளைக்காது என உலகியலில் கூறுவது போல, வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய நீர்வளம் மிக்க மருத நிலம், தாடகை வந்ததால் பாலை நிலமாயிற்று என்று சொல்லப்பட்டுள்ளது. வேள்வி படலம் மாவலியை அழிப்பதற்காக, காசிபன் - அதிதி என்பவருக்கு மகனாய்த் திருமால் ஆலம் வித்துபோல் குறள்வடிவம் (குள்ளவடிவம்) கொண்டு தோன்றினார்: காலம் நுனித்துணர் காசிபன் என்னும் வால் அறிவற்கு அதிதிக்கு ஒரு மகவாய் நீல நிறுத்து நெடுங்தகை வந்தோர் ஆல் அமர் வித்தின் அருங்குறள் ஆனான்' (11) குள்ள வடிவமாக வந்த வாமனன், மூன்றடி மண் அளக்கத் திடீரென வானுற ஓங்கினான் அல்லவா?