பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 205 அதனால், அவனது குள்ள வடிவிற்கு ஆலம் விதை உவமையாக்கப்பட்டுள்ளது. ஆலம் பழத்திற்குள் இருக்கும் விதைகளுள் ஒரு சிறிய விதையே, சிறிய மீன் முட்டையினும் நுண்ணியதாயிருப்பினும், முளைத்துப் பெருமரம் ஆகி மன்னன் நால்வகைப் படையுடன் தங்குதற்கு நிழல் தரும்: 'தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒருவிதை தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை அணிதேர் புரவி ஆள்பெரும் படையொடு மன்னர்க்கு இருக்க கிழலாகும்மே” (17) என்பது வெற்றி வேற்கைப் பாடல். சென்னைஅடையாறு ஆலமரத்தைத் தமிழர் அறிவர். கல்கத்தாவில் உள்ள ஓர் ஆலமரம் ஒன்றரை ஏக்கர் பரப்பளவு உள்ளதாம். மகாராட்டிரத்தில்-வைசத்கர் என்னும் ஊரில், முடியின் சுற்றளவு 1587 அடி கொண்ட ஒர் ஆலமரம் இருந்ததாம். ஏழாயிரம் மக்கள் தங்கக் கூடிய ஒர் ஆலமரம் நருமதை ஆற்றுப் பகுதியில் இருந்ததாம். இருபதினாயிரம் மக்கள் தங்கக் கூடிய ஒர் ஆலமரம் ஆந்திரப் பள்ளத்தாக்கு ஒன்றில் இருந்ததாம். எனவே, கம்பர் ஆல் அமர் வித்து' என்னும் உவமை கூறியிருப்பது மிகவும் நயத்தற்கு உரியது. அகலிகைப் படலம் விசுவாமித்திரர் முதலிய மூவரும் காட்டில் எதிர்ப்பட்ட சோணை ஆற்றை அடைந்தனர். இந்த ஆறு, கம்பரால் ஒரு பெண்ணாக உருவகிக்கப்பட்டடுள்ளது. இடையிலே உள்ள மணல் மேடுகளாகிய மார்பகங்களையும், மெல்லிய வஞ்சிக் கொடியாகிய இடையையும், மலராகிய மேகலையை யும், கருமணலாகிய கூந்தலையும், பிரிந்து செல்லும் கால்கள் (வாய்க்கால்கள்) ஆகிய கால்களையும் உடையவள்