பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 - பால காண்டப் என்பது பாடல் பகுதி. முகில் கடலில் முகப்பதுபோல் வறியவர் மன்னன் செல்வத்தை முகந்து கொண்டார் களாம். முகத்தல் என்பது எண்ணிப் பெறாமல் நிறைய அளவின்றிப் பெறுவதைக் குறிக்கும். கடலில் ஏற்றம் போட்டு இறைப்பது போல , மாடு வைக்கோல் போரிலேயே மேய்வது போல்' என்னும் பழமொழிகள் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கன. - எழுச்சிப் படலம் விலைமகளிரும் குதிரையும் : இராமனது திருமணம் காணத் தயரதன் படை களுடனும் பொதுமக்களுடனும் மிதிலை நோக்கி வந்து கொண்டிருந்தான். படையிலுள்ள குதிரைகள், உடலால் உறவு கொள்ளினும் உள்ளத்தால் உறவு கொள்ளாமல் பலரிடம் தாவித் தாவிச் செல்லும் விலை மகளிரின் உள்ளம் போல், தரையில் நன்றாகக் கால் ஊன்றாமல் மேலே தாவித் தாவிச் சென்றனவாம்: 'சூருடை நிலைஎனத் தோய்ந்தும் தோய்கிலா வாருடை வனமுலை மகளிர் சிந்தைபோல் தாரொடும் சதியொடும் தாவும் ஆயினும் பாரிடை மிதிக்கில பரியின் பந்தியே' (20) பரியின் பந்தி-வரிசையாயுள்ள குதிரைகள். தார் என்பது, குதிரையின் கழுத்தில் கட்டியுள்ள மணி மாலை. சதி என்பது, உரிய முறையில் அடி வைப்பது. மணி ஒசைக்கு ஏற்பவும் அடி வைப்புக்கு ஏற்பவும் குதிரைகள் தாவிச் செல்கின்றன. விலை மாதரின் மூலதனம் முலை ஆதலின், வனமுலை மகளிர் என்றார். தோய்ந்தும் தோய்கிலா மகளிர் என்றதனால், விலை மகளிர் என்பது பெறப்பட்டது.