பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 2 15 சந்திர சயிலப் படலம் யானையின் சூழ்ச்சி : தயரதனின் படைகள் செல்லும் வழியில் நடந்த நிகழ்ச்சி இது. ஒய்வு கொள்வதற்காக ஒரு யானையை மராமரத்தில் கட்டியிருந்தனர். மதங் கொண்ட அந்த யானை கட்டுக்கு அடங்காமல் அந்த மரத்தை இழுத்து வேரோடு பறித்துக் கொண்டு சென்றதாம். தன்னை மடக்கிய பகைவரை, ஊக்கமுடைய ஒர் அரசன் சூழ்ச்சி யினால் வென்று தப்புவது -இதற்கு ஒப்புமை : நேர் ஒடுங்கல் இல் பகையினை நீதியால் வெல்லும் சேர்வு இடம்பெறா உணர்வினன் சூழ்ச்சியே போல, காரொடும் தொடர் கவட்டு எழில் மராமரக் குவட்டை வேரொடும் கொடு கிரி என நடந்தது ஒர் வேழம்' (2) யானை சூழ்ச்சியால் செயல் ஆற்றுவது போல மன்னர் கள் பகைவரிடமிருந்து சூழ்ச்சியால் தப்பிய வரலாறுகள் கம்பருக்குத் தெரியும் போலும். தன்னை அகப்படுத்திய குழியின் பக்க வாட்ட மண் சுவர்ப் பகுதியைத் தன் கொம்பால் குத்திக் குத்தி இடித்துக் குழியைச் சமன்செய்து மேலே தப்பி ஏறும் யானையைப் போல், கரிகாற் சோழன், தன்னை வளைத்துக் கொண்ட பகைவரிடமிருந்து சூழ்ச்சியால் தப்பிய வரலாறு பட்டினப் பாலை என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது.

பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி

அருங் கரை கவியக் குத்திக் குழிகொன்று பெருங் கை யானை பிடிபுக் காங்கு, நுண்ணிதின் உணர நாடி கண்ணார் செறிவுடைத் திண்காப்பு ஏறி வாள் கழித்து உருகெழுதாயம் ஊழின் எய்தி...' (222-227)