பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பால காண்டப் ஒருவர் இரண்டாவதாகச் செய்த நூல் வழிநூல் எனவும் இவற்றை ஓரளவு சார்ந்து செய்யப்பட்ட நூல் சார்பு நூல் எனவும் பெயர் வழங்கப்படும் கம்பர் தமது நூல் வழி நூல் என்கிறார். அதாவது:- வடமொழியில் மூவர் இராமகாதை எழுதியுள்ளனர்; அவர்களுள் முற்பட்டவர் உரைத்துள்ளபடி யான் தமிழ்ப் பாடல்களால் இராம காதையை எழுதுகிறேன் என்று கூறியுள்ளார் : தேவ பாடையின் இக்கதை செய்தவர் மூவர் ஆனவர் தம்முளும் முந்திய நாவினான் உரையின்படி நான்தமிழ்ப் பாவினால் இது உணர்த்திய பண்புஅரோ (10) தேவபாடை = வடமொழி எனப்படும் சம்சுகிருதம். பாடை = பாஷை, மூவர் எனப்படுபவர், வால்மீகி-வசிட்டர். போதாயனர் எனச் சிலரும், வால்மீகி - வசிட்டர் - அகத்தியர். எனச் சிலரும், வால்மீகி-வியாசர்.போதாயனர் எனச் சிலரும், வால்மீகி - பாசகவி - காளிதாசர் எனச் சிலரும் ப ல வ ா று கூறுகின்றனர் எல்லாரும் வால்மீகியை விடவில்லை. எனவே, மூவருள் முந்திய நாவினான்' என்பது வால்மீகியைக் குறிக்கும். எனவே, வால்மீகி ராமாயணத்தின் வழிநூல் கம்ப ராமாயணம் என்பது பெறப்படும். - நூல் பெயரும் எழுதிய இடமும் : உயர் நிலையுடைய நாயகனாகிய திருமாலின் பிறவிகளுள் (அவதாரங்களுள்) ஒன்றாகிய இராமரது பிறவியின் செயலைப் பற்றிக் கூறும் இராமாவதாரம்? என்னும் பெயருடைய - யாப்புத் தொடை அமைந்த குற்றமற்ற இக்கதை நூல்,சடையப்பவள்ளலின் வெண்ணெய் நல்லூர் என்னும் ஊரிலே இயற்றப்பட்டதாகும். கடையின் கின்று உயர் நாயகன் தோற்றத்தின் இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த் தொடை கிரம்பிய தோம் அறு மாக்கதை சடையன் வெண்ணெய் நல்லூர்வயின் தந்ததே (11)