பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 227 மலரைத் துவைத்துக் கசக்கித் தேன் உண்ணும் வண்டுகள் மலர் சூடாத நங்கையரின் கூந்தலை விரும்பு கின்றனவாம். காரணம், அக்கூந்தலில் உள்ள இயற்கைக் கவர்ச்சியாகும் இதைத்தான், சிக்கலுக்கு உரிய குறுந்தொகைப் பாட்டு ஒன்று கூறுகிறது. அப்பாடல்: 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நாட்பின் மயிலியல் செறி எயிற்று அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும் பூவே' (2) என்பது பாடல், இந்தக் குறுந்தொகைப் பாடலை உள்ளத்தில் வைத்துக் கொண்டுதான், கம்பர் தமது பாடலைப் பாடினாரோ! கம்பர் பாடலில் உள்ள ஈற்றடி வேற்றுப் பொருள் வைப்பு எனலாம். மாதரை வெல்வரோ: கணவன் பூக் கொய்யப் புன்னை மேல் ஏறினானாம். அவனது மனத்துக்கு மேல் மனைவி ஏறினாளாம். எனவே, மெய்யறிவினராலுங் கூட (ஞானிகளாலும்) பெண் களை வெல்ல இயலுமோ? (இயலாது) 'நாறு பூங்குழல் கன்னுதல், புன்னைமேல் ஏறினான் மனத்து உம்பர் சென்று ஏறினாள் ஊறு ஞானத்துக்கு உயர்ந்தவ ராயினும் வீறு சேர்முலை மாதரை வெல்வரோ? (36) ஊறு ஞானத்து உயர்ந்தவர் என்பது, ஞானத்தில் மிகவும் ஊறியவர்களாலும் இயலாது என்பதை அறிவிக்கின்றது. மேனகையிடம் மயங்கிய விசுவாமித்திரர் போன்றோர் பற்றிய கதைகள் ஈண்டு எண்ணத் தக்கன. (இப்பாடல் சில பதிப்புகளில் இல்லை). பின் இரண்டடி வேற்றுப் பொருள் வைப்பு.