பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 231 தஞ்சொற்கள் குழறித் தத்தம் தகை தடுமாறி கின்றார் மஞ்சர்க்கும் மாத ரார்க்கும் மனம் என்பது ஒன்றே அன்றோ" (19) கஞ்சம் = தாமரை. அருளினாள் = சீதை. மஞ்சர் = மைந்தர் = ஆடவர். ஆடவர் ஆடவரை விரும்புதல் போல் பெண்கள் பெண்களை விரும்புவதால், இரு சாரார்க்கும் மனம் என்பது ஒன்று எனப்பட்டது. ஆடவர் ஆடவரை விரும்பக் கூடும் என்ற செய்தி, விசுவாமித்திரர் இராமனை நோக்கி, 'ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்’ என (தாடகை வதைப் படலம்-23) விளித்ததிலிருந்து அறியலாம். பெண்கள் பெண்களை விரும்பக் கூடும் என்ற செய்தியை, சூர்ப்பணகை சீதையை நோக்கியதும் அத்தகைய கருத்தை வெளியிட்டதனாலும் அறியலாம். சீவக சிந்தாமணியில் கூறப்பட்டுள்ள பெண்டிரும் ண்மை வெஃகிப் பேதுறும் முலையினாள் என்னும் பகுதியாலும் இது புலப்படும். மற்றும் திருமாலிடம் காதல் கொண்டவள் ஒருத்தி, மன்மதனும் பெண்மையை விரும்பும்படியான அழகனாகிய உன்மேல் காதல் கொள்ளும் பெண்டிரின் நிலைமை என்ன ஆகும் என்று கேட்டது போன்ற கருத்தமைந்த பாடல் திருவரங்கத் தந்தாதியில் உள்ளது. அது: வாராக வாமனனே அரங்க வட்ட கேமி வலவா ராகவா உன் வடிவுகண்டால் மன்மதனும் மட வா ராக ஆதரம் செய்வன் என்றால் உய்யும் வண்ணம் எங்கே வா ராக வாச முலையேனைப் போல் உள்ள மாதருக்கே’’ (60) என்பது பாடல். இந்தப் பாடல்களை எல்லாம் உள்ளத்தில் கொண்டவர் போல் எண்ணும்படிக் கம்பர் தம் பாடலில்