பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 பால காண்டப் இக்கருத்தைப் புகுத்தியுள்ளார். பாடலின் ஈற்றடி வேற்றுப் பொருள் வைப்பு. ஆடவர்க்கு ஆடவரும் பெண்டிர்க்குப் பெண்டிரும் காதல் கொள்வதான செய்திகள் இக்காலத்தில் காதில் அடிபடுகின்றன-செய்தித் தாள்களிலும் இடம் பெறுகின்றன. நாகரிகம் அற்ற செய்தி இது. அழகெலாம் ஓரிடம்: ஒர் உறுப்பின் அழகைக் கண்டாலே-ஒர் உயர்ந்த தகுதியைக் கண்டாலே மயக்கம் செய்யும் சீதையை மகளிர் தம் நடுவே திங்களைக் காண்பது போல் நோக்கி மயக்குற்று நின்றனர். காரணம், அவர்கள் சீதையின் எல்லா வகை அழகையும் ஒருங்கே கண்டதாகும். அங்ங்னம் கண்டால், மயங்காமல் யார்தான் வாளா இருக்க முடியும்? 'இழைகுலாம் முலையினாளை இடை உவாமதியின் நோக்கி, மழைகுலாவு ஒதி நல்லார் களி மயக்குற்று கின்றார் உழைகுலாம் நயனத்தார் மாட்டு ஒன்று ஒன்றே விரும்பற்கு ஒத்த அழகெலாம் ஒருங்கே கண்டால் யாவரே ஆற்ற வல்லார்!’ (20) இழைகுலாம் முலையினாள் = சீதை. உவாமதி = முழு நிலா.ஓதி நல்லார் = பெண்கள். உழைகுலாம் நயனத்தார்= என்பது பொதுவாகப் பெண்களைக் குறிக்கிறது. பாடலின் ஈற்றடி வேற்றுப் பொருள் வைப்பு. கடிமணப் படலம் ஒரு நாள் தாங்காதா? தெருவில் இராமனைக் கண்ட சீதை அன்றிரவு உறக்கம் கொள்ளாமல் அவனையே எண்ணிப் பிதற்று. கின்றாள்: என் மனமே, அவருடனேயே போய்விட்டாய்;.