பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 233 மீண்டும் அவர் என்னிடம் வரும்போதுதான் நீயும் வருவாயா? நாளைக்கே திருமணம் கைகூடலாம். இன்னும் நீ ஒரு நாள் பொறுத்திருக்கக் கூடாதா? நாளை அவரை அடையலாமே! ஒரு நாள் தாங்காமல் உழல்பவர் உண்டோ?- என்கிறாள்: கருநாயிறு போல்பவர் காலொடு போய் வருநாள் அயலே வருவாய்! மனனே பெருநாள் உடனே பிரியாது உழல்வாய் ஒருநாள் தரியாது ஒழிவார் உளரோ? (4) கருநாயிறு போல்வான் = இராமன். இப்பொருள் உவமை. ஞாயிறு என்பதுபோல் நாயிறு என்ற வழக்காறும் உண்டு. தமிழில் நான், நாம், நாங்கள், எங்களை, நம்மேல் என்று நகரம் போட்டு ஒலிக்கப்படுபவை, மலையாளத்தில் ஞான், ஞங்கள், ஞங்களே, ஞங்களில் என்று ஞகரம் போட்டு ஒலிக்கப்படுவது ஈண்டு எண்ணத் தக்கது. இப்பாடலின் ஈற்றடியை வேற்றுப் பொருள் வைப்பு எனலாம். ஈண்டு, "அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீ எமக்கு ஆகா தது' (1291)

  • உறாஅ தவர்க் கண்ட கண்ணும் அவரைச்

செறாஅ ரெனச் சேறி என் நெஞ்சு' (1292) "கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேரீ பெட்டாங்கு அவர்பின் செலல்’’ (1293) "துன்பத்திற்கு யாரோ துணையாவார் தாமுடைய நெஞ்சம் துணையல் வழி' (1299) 'தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய நெஞ்சம் தமரல் வழி' (1300) என்னும் திருக்குறள்கள் ஒப்பு நோக்கத் தக்கன.