பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 29 என்பது பாடல் பகுதி. (தமிழ் நாட்டு நிலைமையை இரண்டோரிடத்தில் நான் நேரில் கண்டுள்ளேன்), அரசின் மகிழ்ச்சிச் செயல்கள் நாட்டில் மகிழ்ச்சியான புதுமைச் செயல்கள் நிகழும் போது, அரசு, சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்தலும், வரிகளைக் குறைத்தல் அல்லது நீக்குதல் செய்தலும் இயற்கை. இவ்வாறாக, தயரதன் பிள்ளைகள் பிறந்தபோது, ஏழாண்டுக் காலத்திற்கு வரிகள் நீக்கப் படும்; கருவூலத்தைத் திறந்து வறியவர் வேண்டிய செல்வம் பெற்றுக் கொள்ளலாம்'- என்பதாகப் பறையறைய ஏவினான். 'இறை தவிர்ந்திடுக பார் யாண்டு ஓர் ஏழ்: நிதி கிறைதரு சாலை தாள் நீக்கி யாவையும் முறைகெட வறியவர் முகந்து கொள்க எனா அறை பறை என்றனன் அரசர் கோமகன்' (108) என்பது பாடல். அண்ணாமலைப் பல்கலைக் கழகக் கம்ப ராமாயணப் பதிப்பில், 'இறை தவிர்ந்திடுக பார் யாண்டு ஓர் ஏழொடு ஏழ்’’ என்றுள்ளது. இதன்படி நோக்கின். பதினான்கு ஆண்டுக் காலம் வரிகள் நீக்கப்படும் எனக் கருத்து கொள்ள வேண்டும். கலம் உசாவுதல் ஒருவர் மற்றொருவரைக் காணும்போது, இப்போது என்ன வேலை நடக்கிறது? வாழ்க்கையில் ஒன்றும் தொல்லை இல்லையே? மனைவி மக்கள் நலமா?என்றெல்லாம் நலம் உசாவுதல் வழக்கம். இவ்வாறே, இராமன் நகர மாந்தர்களைக் காணும்போதெல்லாம் நலம் வினவினான்.