பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பால காண்டப் பெருமைகளையும் சொல்லி முடித்துக் கரை ஏறுதல் நான் முகனாலும் முடியாது எனக்கூறுகிறார், பாடல். 'அயன் புதல்வன் தயரதனை அறியார் இல்லை அவன் பயந்த குலக் குமரர் இவர் தமக்கு உள்ள பரி செல்லாம் நயந்துரைத்துக் கரை ஏறல் நான் முகற்கும் அரிதாம்' (15) 'மாப்பிள்ளையின் பெருமை: மாப்பிள்ளையைச் சேர்ந்தவர்கள், மணம் பேசும் நோக்கத்துடன், பெண்ணின் தந்தையிடம் மாப்பிள்ளை :யின் பெருமைகளையெல்லாம் எடுத்துக் கூறுதல் மரபு. அவ்வாறே, விசுவாமித்திரர், சீதையின் தந்தையாகிய சனகனிடம் இராமன் பெருமைகளை விரிவாக விளக்கு கிறார். இறுதியில், கல்லாய்க் கிடந்த கோதமனின் மனைவி அகலிகைக்கு இராமனது கால் தூசு பழைய உருவம் கொடுத்தது என்றும், என் உயிரினும் இராமனிடம் எனக்குப் பற்று மிகுதி என்றும் கூறி, இராமனின் வரலாற்றையும் தோள் வலிமையையும் அறிவித்து முடிக்கிறார். இறுதிப் பாடல் வருமாறு: 'கோதமன்தன் பன்னிக்கு முன்னை உருக் கொடுத்தது இவன் போது வென்ற தெனப் பொலிந்த பொலங் கழல் கால் பொடி கண்டாய் காதல் என்றன் உயிர்மேலும் இக்கரியோன்பால் . உண்டால் ஈது இவன்றன் வரலாறும் புயவலியும் என உரைத்தான் (31) எழுச்சிப் படலம் உழுந்து விழ: மக்கள் கூட்டம் மிகவும் நெருக்கமாக-மிகுதியாக இருப்பின் எள் விழ இடம் இல்லை என்று கூறுவது