பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பால காண்டப் கிறார். அதாவது:-அந்நாட்டு மக்கள் எந்தத் தீமையும் (பாவமும்) செய்யாததால் எமனுக்கு அங்கு வேலை யில்லை. அவர்தம் உள்ளம் செம்மை உடையதாதலின் சினமே எழாது. அவர்கள் அறச்செயல்கள் அன்றி மறச் செயல்கள் புரிவது இல்லையாதலால், அங்கே. இழிதகைமையே இல்லை; புகழான மேன்மையே உள்ளது. பாடல்:

  • கூற்றம் இல்லை ஒர் குற்றம் இலாமையால்

சீற்றம் இல்லை தம் சிங்தையின் செம்மையால் ஆற்றல் நல்லறம் அல்லது இலாமையால் ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே. - (39). . மேலும், அந்நாட்டில் யாரும் நன்னெறியைக் கடப்பது (மீறுவது) இல்லையாம்.ஒருவரும் நல்ல குறிக்கோளிலிருந்து பிறழ்வது இல்லையாம். அங்கே சிறுமை (அற்பம்) என்பதே கிடையாதாம். வெறித்தனமும் ஆண்டு இல்லையாம். இந்தக் கருத்துகளைக் கம்பர் பின்வருமாறு சுவை படக்கூறுகிறார். அந்நாட்டில், ஆற்று வெள்ளம் தவிர வேறு யாரும் நெறி கடப்பதில்லை. குங்குமச் சாந்து அணிந்த தோள்களில் எழுதிய (தொய்யில்) குறி அழிவதைத் தவிர வேறு குறி (குறிக்கோள்) அழிவதில்லை. பெண்களின் இடுப்புகள் சிறுமை (ஒடுக்கம்) உடையனவே தவிர, வேறு சிறுமை (அற்பம்) ஆங்கு கிடையாது. பெண்களின் மலர் சூடிய கூந்தலே வெறி (மணம்) உடையதே யன்றி, வேறு எவரும் வெறிச் செயல் புரியார். பாடல்: 'நெறி கடந்து பரந்தன நீத்தமே குறி அழிந்தன குங்குமத் தோள்களே சிறிய மங்கையர் தேயும மருங்குலே வெறியவும் அவர் மென்மலர்க் கூந்தலே' (40). நகுவன : மங்கையரின் விழிகள் விதியை நோக்கியும், அவர்தம் கடை பெண் யானையின் நடையினையும், மார்பகங்கள்