பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் முன்னுரை 1989 ஆம் ஆண்டு புதுவையில் நடைபெற்ற கம்பன் விழாவில் வெளியிடுவதற்காகப் புதுவைக் கம்பன் கழகச் செயலாளர் உயர்திரு புலவர் கம்பவாணர் அ. அருணகிரி யவர்கள் இட்ட அன்புக் கட்டளையின்படிச் சுந்தர காண்டச் சுரங்கம்' என்னும் நூல் எழுதித் தந்தேன். விழாவில் நூல் வெளியிடப் பெற்றது. ஊக்குவிப்பு: அந்த நூலுக்கு நேரிலும் மடல் வாயிலாகவும் பெரிய பாராட்டு கிடைத்தது. கம்ப ராமாயணத்தின் மற்ற ஐந்து காண்டங்கள் பற்றியும் நூல் எழுதுமாறு அன்பர்களால் பணிக்கப் பெற்றேன். இந்த ஊக்குவிப்பால், அயோத்தியா காண்ட ஆழ்கடல்' என்னும் நூல் எழுதிக் கொடுத்தேன். அது 1990 ஆம் ஆண்டுக் கம்பன் விழாவில் வெளியிடப் பெற்றது. அடுத்து 1991 ஆம் ஆண்டுக் கம்பன் விழாவில் வெளியிடுவதற்காக இந்தப் பால காண்டப் பைம் பொழில்? என்னும் நூலை எழுதி யளித்துள்ளேன். பால காண்டப் பைம் பொழிலைச் சுற்றிப் பார்த்து அனைத்து மலர்களையும் கனிகளையும் கொய்து தருதல் அரிய செயல். எளிய அடியேன் இயன்றவரை இந்நூல் வாயிலாக அவற்றை அறிமுகம் செய்துள்ளேன். கம்ப ராமாயணப் பதிப்புகள்: கம்ப ராமாயண ஓலைச் சுவடிகள் இருநூற்றுக்கும் மேல் உள்ளன. கம்ப ராமாயணத்தைப் பலர் பதிப்பித்துள்ளனர். பதிப்புக்குப் பதிப்பு வேறுபாடுகள் உள்ளன. அவற்றுள், எஸ். இராஜம் அவர்கள், பதிப்பாசிரியர் குழு அமைத்துப் பல சுவடிப் படிகளையும் ஆராய்ந்து ஒப்பு நோக்கச் செய்து, மர்ரே அண்டு