பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பால காண்டப் என்னும் பொருள் உடையதாகும். 'சே' என்பதைப் பகுதியாக உடைய சேந்த' என்னும் கம்பரின் சொல்லாட்சி திருத்தமான புணர்ச்சி விதிக்குத் துணை செய்வதை ஈண்டு அறியலாம். பண்டி நாட்டுப் படலம் வண்டி என்னும் பொருளில் பண்டி’ என்னும் சொல்லைக் கையாண்டுள்ளார் கம்பர். நெறிகளும் புதையப் பண்டி கிறைத்து மண்நெளிய ஊர்வார்' (20) என்பது பாடல் பகுதி, வண்டியில் நெல் ஏற்றிச் செல்வது இங்கே அறிவிக்கப்பட்டுள்ளது. வண்டி என்னும் பொருளில் பண்டி என்னும் சொல் தெலுங்கிலும் கன்னடத்திலும் உள்ளது. தமிழில் உள்ள வ' என்னும் எழுத்துக்குப் பதிலாக, பகர வரிசை எழுத்துகள் சில கன்னடச் சொற் களில் வரும். எடுத்துக்காட்டுகள்: வரை = (பேச்சுத் தமிழில்) வரெ-கன்னடத்தில் பரெ. தமிழில் வெள்ளி, கன்னடத்தில் பெள்ளி. மலையாளத்தில் வண்டி என்பதே வழங்கப்படும். இந்த அமைப்பை நோக்குங்கால், இந்த நான்கு மொழி களும் ஓரின மொழிகள் அதாவது திராவிடக் குடும்ப மொழிகள் என்பது புலனாகும். குப்பை-ஊட்டிடம் கோசல நாட்டில் உணவு ஊட்டும் (வழங்கும்) இடங் களில் உணவுப் பொருள்கள் நிரம்ப உள்ளனவாம். உணவளிக்கும் அறநிலையத்தை ஊட்டிடம்’ எனக் கம்பர் குறிப்பிட்டிருப்பது சுவையாயுள்ளது. இது மலையாள மொழியில் ஊட்டுப் புரை” எனப்படுகிறது. அங்கே, பிறை நிலாபோல் வளைந்த தலைமுனையையுடைய இரும்பு அரிவாள் மணையால் அரியப்பட்ட காய்கறிக் குவியல்களும்,