பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 8賞 செனம் : மக்கள் என்னும் பொருளில் உள்ள ஜனம் என்பது வடமொழிச் சொல். புதுச்சேரி வட்டாரத்தில் மக்கள் என்னும் பொருளில் செனம்’ என்னும் சொல் வழங்கப் படுகிறது. (என் மாமியார் செனம்' என்பார்கள்.) அருமறை முனிவரும் அமரரும் அவனித் திருவும் அங்ங்கர் உறை செனமும்... (i 24) எனக் கம்பர் மக்களைச் செனம் என்னும் சொல்லால் குறிப்பிட்டுள்ளமை ஒருவகை வியப்பளிக்கிறது. தாடகை வதைப் படலம் சாபம்: சாபம் என்னும் சொல்லுக்கு வில் என்னும் பொருளும்; பிறர்க்குக் கேடு உண்டாக்கும் கெடுமொழி என்னும் பொருளும் உண்டு. இரு பொருளையும் அமைத்துக் கம்பர் ஒரு பாடலில் விளையாடியுள்ளார். அகலிகையின் கணவராகிய கெளதம முனிவரைப் பற்றிக் கூறுமிடத்து, அம்பு எய்யும் வில்லின் செயல் தவறினும், முனிவரின் சாபம் (கெடுமொழி, தவறாது என்று அறிவித்துள்ளார். 'சரம்தரும் சாபம் அல்லால் தடுப்பருஞ் சாபம் வல்ல வரம தரு முனிவன்...” (20) என்பது பாடல் பகுதி. பெரியோரின் சினத்தின் விளைவைச் சிறிதும் தடுக்க இயலாது என்னும் கருத்துடைய

  • குணமென்னும் குன்றேறி கின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது’’ (29), என்னும் குறளும், வில்லின் ஆற்றலினும் சொல்லின் ஆற்றலே மிகுதி என்னும் கருத்துடைய