பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பால காண்டம் எல்லையில் பொருள்கள் எல்லாம் இடைதடுமாறும் ឆ័ត្រា செல்லுறு கதியில் செல்லும் வினை எனச் சென்றது அன்றே! (17). ஒன்றே பல: தெய்வம் ஒன்றே; ஆயினும், பல சமயத்தினருக்கும் உரிய பல தெய்வங்களாகப் பிரிவுபட்டிருப்பது போல, இமய மலையில் பிறந்து கடலில் கலக்கும் சரயு ஆறு, தான் ஒன்றானாலும், பின்னர்ப் பல சிற்றாறுகளாகவும் கால்வாய்களாகவும் பிரிந்தும், ஏரி - குளம்-குட்டைகளை நிரப்பிப் பரந்தும் சென்று கொண்டிருந்தது. கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம் எல்லையில் மறைகளாலும் இயம்பரும் பொருள் ஈது என்னத் தொல்லையின் ஒன்றே ஆகித் துறைதொறும் பரந்த - சூழ்ச்சிப் பல்பெரும் சமயம் சொல்லும் பொருளும்போல் பரந்த தன்றே (19) பல ஆறுகளும் ஒரு கடலில் கலப்பது போல், பல சமயங்களும் சென்றடையும் தெய்வம் ஒன்றே என்று கூறுவது பயின்று வரும் கூற்று. அதே போன்ற கருத்து, இங்கே நேர் மாறாகச் சொல்லப்பட்டுச் சுவைபயக்கின்றது. அதாவது: ஒரே தெய்வம் பல சமயத்தவராலும் பல தெய்வங் களாகப் பரவப்படுவதுபோல், ஒரே ஆறு, பல கால்வாய் களாகப் பிரிந்து பரந்து செல்கிறது - என்பது. கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்' என்னும் தொடர், மலைத் தலைய கடல் காவிரி என்னும் பட்டினப் பாலை நூல் தொடரை (6) நினைவுறுத்துகிறது.