பக்கம்:பாலபோதினி.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எழுத்தியல்]

37

இவற்றை இக், இங் என்றாவது இக்கன்னா, இங்ஙன்னா என்றாவது உச்சரித்தல் வழு.


அம்மெய்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று வகைப்படும். க, ச, ட, த, ப, ற என்ற ஆறும் வல்லினமாம்; ங, ஞ, ண, ந,ம, ன என்ற ஆறும் மெல்லினமாம்; ய, ர, ல, வ, ழ, ள என்ற ஆறும் இடையினமாம்.


மெய்யெழுத்துக்களின் பகுப்புக்களாகிய வல்லின, மெல்லின, இடையினங்களை க்,ச்,ங்,ஞ்,ய்,ர் என மெய்யெழுத்தாகவே சொல்லாமல் க,ச, ங, ஞ,ய, ர எனச் சொல்லுவதேன்?


சார்பெழுத்துக்கள்

1.உயிர்மெய்.-இவை மெய்யும் உயிரும் கூடிப்பிறக்கும் எழுத்துக்களாம். எல்லாமெய்யோடும் எல்லா உயிரும் கூடும்; ஆதலால் பதினெட்டு மெய்

                    3
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/38&oldid=1533939" இலிருந்து மீள்விக்கப்பட்டது