பக்கம்:பாலபோதினி.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

[எழுத்ததிகாரம்

இவற்றின் பெயர்கள் பெயர்ப் பகுபதத்தின் பகுதிகளாம்.

சினை = உறுப்பு

உ-ம். பொன்னன்: இதில் பொன் என்ற பொருளின்பெயர் பகுதி; கோயமுத்தூரான்: இதில் கோயமுத்தூர் என்ற இடத்தின் பெயர் பகுதி; சித்திரையான்: இதில் சித்திரை என்ற மாதத்தின் (காலம்) பெயர் பகுதி; பல்லன்: இதில் பல் என்ற சினையின் பெயர் பகுதி; தட்டான்: இதில் தட்டு என்ற தொழிலின் பெயர் பகுதி; கரியன்: இதில் கருமை என்ற குணத்தின் பெயர் பகுதி.

b. வினைப்பகுதி. - நட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை, நொ, போ, வௌ, உரிஞ், உண், பொருந், திரும், தின், தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு என்பவை போன்றன வினைப்பகுதிகளாம்.

உ-ம். நடந்தான்; உண்டான்; கேட்டான். இவற்றுள் நட, உண், கேள் என்றவை பகுதிகளாக வந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/53&oldid=1469927" இலிருந்து மீள்விக்கப்பட்டது