பக்கம்:பாலபோதினி.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

[எழுத்ததிகாரம்

மண்வெட்டி: இதன் பகுதியாலுணர்த்தப்படும் வெட்டுதலாகிய தொழிலுக்கு மண்வெட்டி என்ற வார்த்தையாலுணர்த்தப்படும் ஆயுதம் கருவியாதலால் இ விகுதி இங்கே கருவிப் பொருளில் வந்ததென்று கொள்க.

இதன் பகுதித்தொழிலில் கர்த்தா செயப்படுபொருள் இவை எவை?

7. இடைநிலை. - பெயர்ச்சொல்லின் இடைநிலைக்குப் பொருள் இல்லை. பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நிற்பதால் இடைநிலை எனப்பட்டது. இவ்வாறே பகுதியை முதனிலை என்றும் விகுதியை இறுதிநிலை என்றும் சொல்வதுண்டு.

உ - ம். வலைச்சி: இப்பெயர்ச்சொல்லில் ச் என்பது வலை என்ற பகுதிக்கும் சி என்ற விகுதிக்கும் இடையில் நிற்பதால் இடைநிலை என்றுகொள்க.

வினையிடைநிலை ஒன்பது. அவை காலத்தையுணர்த்தும்.அவற்றுள் :--

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/57&oldid=1468891" இலிருந்து மீள்விக்கப்பட்டது