பக்கம்:பாலபோதினி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெயரியல்]

5


பெயரியல்.

1. பெயர்ச்சொல்.—பெயர்ச்சொல்லாவன, காலத்தைக்காட்டாமல் வேற்றுமை உருபுகளை ஏற்கத்தக்கனவாய்ப் பொருளை உணர்த்திவருஞ்சொற்களாம். ஏற்கத்தக்கன=கொள்ளத்தக்கன.

2. ஆண்பாற்பெயர்.—னகரவொற்றீறாய் வருவன ஆண்பாற் பெயராம்.

உ - ம். அவன், பெரியன்.

3. பெண்பாற்பெயர்.—ளகரவொற்றீறாய் வருவனவும் பொருந்துமாறு இகர விகுதிபெற்றுவருவனவும் பெண்பாற்பெயராம்.

உ - ம். அவள், ஒருத்தி.

4. பலர்பாற்பெயர்.—ரவ்வொற்றீறாய் வருவனவும் பொருந்துமாறு கள் ஈறாய் வருவனவும் பலர்பாற்பெயராம்.

உ - ம். அவர், மந்திரிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/6&oldid=1536156" இலிருந்து மீள்விக்கப்பட்டது