பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

星妻 பால போத இலக்கணம்.

11. சோல்லியல்.

22,-சொல் என்றுல் என்ன?

ஒர் எழுத்துத் தனித்து நின்ருவது, பல எழுத்துக்கள் சேர்ந்து நின்ருவது ஒரு பொரு ளைத் தருவது, சொல்லாம்.

குறிப்பு-சொல், பதம், மொழி என்பன ஒரு பொருள் சொற்கள். (உ.ம்) பூதா-ஈ.ஓரெழுத்துப்பதம்.

அணி கலம்-பருப்பு...... பல எழுத்தப்பதம்.

23.-தமிழ்ச் சோற்கள் எத்தனை வகைப்படும்?

(1) பெயர்ச்சொல், (2) வினைச்சொல், (3) இடைச்சொல், (4) உரிச்சொல் என நான்கு வகைப்படும்.

1. பெயர்ச் சொல்,

24.--பெயர்ச்சொல்லாவது யாது?

எதாவது ஒரு பொருளைக் குறிப்பதற்கு வழங்கும் சொல் பெயர்ச்சொல்லாம்.

குறிப்பு:-இப்பெயர்கள் பொருள்களுக்குக் காரணம் பற்றியும் காரணமில்லாதும் இடப்பட்டு வழங்கும். 25-பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும் அவை எவை?

பெயர்ச்சொல்:- i, பொருட்பெயர், 2. இடப்பெயர், 3. காலப்பெயர், 4. சினைப் பெயர், 5. குணப்பெயர், 6. தொழிற்பெயர் என ஆறு வகைப்படும்.