பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV. தொடர்மொழி இயல்.

108.-தொடர் மொழி என்றல் என்ன?

பெயர், வினை முதலிய சொற்கள் ஒரு கருத் தை விளக்குவதற்கு ஒன்ருேடொன்று தொ டர்ந்து நிற்பது தொடர்மொழியாம். 109.-அது எத்தனை வகைப்படும்?

அது 1. எச்சத் தொடர்மொழி, 2. முற்றுத்

தொடர்மொழி என இரண்டு வகைப்படும். 110.-எச்சத் த்ொடர்மொழியாவது யாது?

பெயர் முதலிய சொற்கள் தொடர்ந்து நின்றும் ஒரு முடிந்த கருத்தைத் தராமலிருப் பது எச்சத் தொடர் மொழியாம்.

கண்ணன் பள்ளிக்கூடம் போய்இத்தொடரில் பல சொற்கள் தொடர்ந்து கின்றும் போய் இன்னது செய்தான்் என ஒரு கருத்தை முடிவாகத் தரவில்லை. 111.-முற்றுத் தொடக்மொழியாவது யாது?

ஏதேனும் ஒரு கருத்து முடியும்படி சொற். கள் தொடர்ந்து நிற்பது முற்றுத் தொடர் மொழியாம்.

கண்ணன் பள்ளிக்கூடம் போய்ப் படித்தான்். இதில் போய் இன்னது செய்தான்் (படித்தான்்) என் உம் கருத்து முடிவு பெற்றிருக்கிறது.