பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

5

தொடர்மொழி இயல்.

செய்-செய்கையை, படுபொருள்-அடையும் பொருள்-செய்+படு. பொருள். 117.-ஒரு முற்றுத் தொடர்மொழி சொல்லி, அதனுள் எழுவாய்

பயனிலை, செயப்படுபொருள்களை எடுத்துக் காட்டு,

குயவன் குடத்தை வனைந்தான்். இதில் வனைதல் தொழிலுக்குக் குயவன் முதன்மையாகநின்றபடியால்'குயவன்"எழுவாய். குயவனகிய எழுவாய் செய்த தொழில், வனைந்தது; ஆகையால், வனைந்தான்் என்பது பயனிலை.

குயவன் செய்த வனைதல் செய்கையை அடைந்த பொருள் குடம்; ஆகையால் குடம்' என்பது செயப்படுபொருள். 118.-எழவாயை வா க்கியத்தில் அறிந்துகொள்வது எப்படி?

பயனிலை உயர்திணை முடிபாயிருந்தால் யார் என்பதையும், அஃறிணை முடிபாயிருந்தால் எது என்பதையும் பயனிலைக்கு முன் வைத்துக் கேள்வி கேட்டால் அதற்கு வரும் விடையே எழுவாயென்று அறியலாம்.

வந்தான்் இப்பயனிலைக்கு முன் யார் என்று கேட் டால் அவன் என்று விடை வரும் வரவே. "அவன்’ என்பது எழுவாயாம்.